
காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு

நமது ராணுவத்தைப் பொறுத்தவரை நம் முன்னே உள்ள பெரிய சவால், அதை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது மட்டுமல்ல; நம் நாட்டில் தயாராகும் போர்க் கருவிகள், ஆயுதங்கள், குண்டுகள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், கடற்படைக்கான கப்பல்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், நவீனக் காலணிகள், பனிமலைகளுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுடன் ராணுவத்தைத் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதும் பெரிய சவாலாகும்.
உலகிலேயே அதிக அளவு ராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா? இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.
2004-05-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத் தேவைகளுக்கான இறக்குமதி 111% அதிகரித்துவிட்டது என்று ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம்’ தெரிவிக்கிறது.
பாகிஸ்தானுக்கு உதவும் சீனா
சீனத்தில் இப்போது ராணுவத் தேவைகளுக்கான எல்லாமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதியும் செய்யப்பட்டு நல்ல லாபமும் ஈட்டப்படுகிறது. சீன இறக்குமதியில் முதலிடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஜே.எஃப்.17 ரக போர் விமானம் உள்பட எல்லாமே சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவ்வளவு ஏன், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்துமே சீனத்தில் வடிவமைக்கப்பட்டவைதான். மியான்மர், வங்கதேசம், இலங்கை ஆகிய இந்தியாவைச் சுற்றி யுள்ள நாடுகளுக்கும் சீனாதான் தொடர்ந்து ஆயுதங்களை விற்றுவருகிறது.
அமெரிக்கா எங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று ஆப்கானிஸ்தான் சில ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள் அடங்கிய பட்டியலை இந்தியாவிடம் அளித்தது. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தர முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. இது ஒன்றே போதும் நம்முடைய பாது காப்புத் துறை எந்த அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ள.
போஃபர்ஸ் பீரங்கி
அக்னி-5 ரக ஏவுகணையும், கடற்படைக்குத் தேவைப்படும் அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால்தான் நாம் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று பொருள். பெரிய அளவில் எந்த ராணுவ சாதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் இல்லை. நம்முடைய நாட்டில் தயாராகும் ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கியைக்கூடப் பிற நாடுகள் வாங்காது என்பதே நம்முடைய ஆயுதங்களின் தரம். இந்தியாவுக்குத் தேவைப் படும் ராணுவ சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பொறுப்பு எவருடையது, இதில் ஏற்படும் காலதாமதங்களுக்கு யாரைத் தண்டிப்பது என்பதில்கூட நம்மிடையே தெளிவான பதில் இல்லை. போஃபர்ஸ் எஃப்.எச்.77 ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதில்கூட முடிவெடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தியது நம்முடைய திறமைக்கும் அக்கறைக்கும் நல்லதொரு சான்று!
ஸ்வீடனிலிருந்து 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க சுமார் ரூ.1,710 கோடி மதிப்பில் 1986-ல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு தேவைப்படும் 1,000 பீரங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உதவ வேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்தக் கொள்முதலுக்காக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறி பிரச்சினை பெரிதானதால் அந்த ஒப்பந்தம் பாதியில் கைவிடப்பட்டது. இந்தியாவுக்குத் தேவைப்படும் பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இறக்குமதி செய்யவும் மாற்று வழி யோசிக்கப்படவில்லை. ராணுவம் தன்னுடைய தேவைக்காக மாற்று நிறுவன பீரங்கிகள் வேண்டும் என்று கேட்டபோது சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பீரங்கிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுடனும் கமிஷன் புகார் உருவானதால் அவையும் நிராகரிக்கப்பட்டன.
யார் பொறுப்பு
போஃபர்ஸ் பீரங்கி மட்டும் இல்லையென்றால், கார்கில் போரில் இந்திய ராணுவம் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய விவரம் ஆகிய அனைத்தும் 1987-லேயே இந்திய அரசிடம் ஸ்வீடனால் தரப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தூசிபடிந்து கிடந்தன. வேறு எந்த மாற்றும் இல்லையென்ற நிலைமைக்குப் பிறகே அதில் கவனம் செலுத்தினார்கள். உள்நாட்டிலேயே பீரங்கியைத் தயாரிக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிறகு, அதில் வெற்றி ஏற்பட்டது. ஸ்வீடன் தயாரித்துத் தந்த பீரங்கியால் 30 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைத்தான் சுட முடியும். இப்போது இந்தத் திறன் 38 கிலோ மீட்டராக அதிகமாகியிருக்கிறது. ஒரே சமயத்தில் பல ராக்கெட்டுகளை வெடிக்க வைக்கும் லாஞ்சர்களையும் அடுத்து வெற்றிகரமாகத் தயாரித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த பீரங்கியின் வடிவமைப்புத் தகவல்களை வாங்கி வெறுமனே வைத்திருந்ததற்கும், உள்நாட்டில் தயாரிக்காமல் காலம் கடத்தியதற்கும் யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்?
உடனடியாகச் செய்ய வேண்டியவை
ராணுவம் தொடர்பான, உயர் தொழில்நுட்பம் தேவைப் படுகிற தொழில்துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு இப்போது நிர்ணயித்துள்ள வரம்பை நீக்க வேண்டும்.
ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்க அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் உள்ள ஏகபோக உரிமை முடிவுக்கு வர வேண்டும். அணுசக்தி நீர்மூழ்கிகள், டேங்குகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் மிகவும் நுட்பமான கருவிகள், பாகங்களைத் தனியார் துறையிடமிருந்துதான் வாங்கிக்கொள்கின்றனர். அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். ஏகபோக உரிமையை நீக்க வேண்டும்.
ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை இறக்குமதி செய்தோ, அல்லது கருவிகளை இறக்குமதி செய்து இணைத்தோ பூர்த்திசெய்துகொள்ளும் இப்போதைய முறையைக் கைவிட வேண்டும். இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். எடை குறைவான விமானங்கள் தயாரிப்பு போன்றவற்றில் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம்.
ராணுவத் தொழில்நுட்பம், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் அமெரிக் காவிடமிருந்தும் சீனாவால் எளிதில் பெற முடியாது, இந்தியா அப்படியல்ல. இஸ்ரேல், ரஷ்யாவிடமிருந்தும்கூட வாங்கிக்கொள்ள முடிந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகத்தை சிவில் அதிகாரிகள் நிர்வகிக் கும் இப்போதைய அமைப்பு முறை மாற வேண்டும். முப்படைகளின் தலைமைக்கும் பாதுகாப்புத் துறையின் தலைமைக்கும் நெருங்கிய ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அப்படியிருந்தால்தான் இப்போதைய அவலநிலை நீங்கும்.
(கட்டுரையாளர் பாகிஸ்தானில் இந்திய ஹைகமிஷனராகப் பதவி வகித்தவர்)
பிசினஸ் லைன், தமிழில்: சாரி.
“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் – ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் – அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
“ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்” என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. “இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்” என்று இன்னொரு நாளேடு எழுதியது.
இயற்கையான எதிர்வினை
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. ‘தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல’ ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும்.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல். உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் – அப்படிப் பேச முடியாதவர்களைவிட – தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்றனர்.
இதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை ‘ஆங்கில அறிவாளி’களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது.
சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்!
இந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான்.
இனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும்.
எந்த மொழி விருப்பமானது?
நாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது.
பெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர்.
ஆங்கிலம் சிறுபான்மையே
அதற்காக, முலாயம் கோரியபடி ஆங்கிலத்துக்குத் தடை விதிப்பது சரியாகிவிடாது. நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் ‘மொழிஒதுக்கல்’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆங்கில ஆதிக்கம்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.
தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.
தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.
ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.
இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.
ஆங்கிலம் விளைவித்த கேடு
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.
இந்தியா செய்திருக்க வேண்டியது
ஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ‘சரளமாக ஆங்கிலம் பேச வராதா?’ என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் ‘ஆங்கில மாயை’யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா?
© பிஸினஸ்லைன், தமிழில்: சாரி.
தமிழகம் முழுவதும் பணத்தாசை காட்டும், செல்வந்தர்களிடம் மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 22 ஆயிரத்து, 877 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. இதில், 19 ஆயிரத்து, 388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது. காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை உள்ளது. திறந்தவெளி காடுகளில் மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் மக்களுக்கு அனுமதி உண்டு.
மாநிலம் முழுவதும் வனச்சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்ம நபர்களின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது. வனக்குற்றத்தை தடுக்க, வனத்துறையினர் மேற்கொண்ட எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை.
வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ;
சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும் வனக்குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், பலரும் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில் மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழை இளைஞர்களை வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள, “மாஃபியா’ கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
(dm)
உலகில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்நோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் மத்தியில் நோய்க்கான காரணம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டால், இந்நோயால் இறப்போரின் எண்ணிக்கையையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணகுமார், விஜயபாஸ்கர், கிருஷ்ணகுமார் ரத்தினம், ஆனந்த செல்வக்குமார், ரத்தயியல் நிபுணர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:மனித உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒருபுறம் உற்பத்தியாகும் அதேநேரத்தில், மறுபுறம் அழிந்துகொண்டே வரும். ரத்தத்தில் 120 நாள்களுக்கு ஒருமுறை புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. பழைய செல்கள் அழிந்து விடுகின்றன.
இதில் சில ரோகோ செல்கள் (மோசமான செல்கள்) உண்டாகின்றன. இந்த செல்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கின்றன. இந்த செல்கள் 3 மாதங்களில் புற்றுநோய் செல்லாக மாறுகின்றன. இது ஒவ்வொரு 3 மாதத்துக்கும் மடங்குகளாக உற்பத்தியாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. துவக்கத்தில் இது சிறிய புற்றுநோய் கட்டியாக இருக்கும். இக்கட்டியால் பிரச்னை இருக்காது. எனவே, யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து விடுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு நாள்பட்ட இருமல், சளியுடன் ரத்தம், குரலில் மாற்றம், அதிக ரத்தப்போக்கு, ஆறாத புண், மரு மற்றும் மச்சத்தில் மாற்றம், புதிய கட்டிகள் போன்ற அறிகுறிகள் தெரியும்.
நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், நவீன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த வாய்ப்புள்ளது. முன்பு நோயை குணப்படுத்த முடியாது என்ற கூறப்பட்டது. இது வதந்திதான். இன்றைய காலகட்டத்தில் நவீன சிகிச்சைகள் மூலம், நோயின் தாக்கத்தை சிகிச்சைகள் மூலம் 80 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
சர்வதேச அளவில் இருதய நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம் என்ற நிலையில், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு வகையான புற்றுநோய்களால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2030 ஆம் ஆண்டில் 2.14 கோடி புதிய புற்றுநோயாளிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் 30 சதவீதம் பேரும், வைரசினால் 20 சதவீதம் பேரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கொழுப்புள்ள உணவுப் பொருள்கள், தொடர்ச்சியாக மது அருந்துதல், பான்பராக், குட்கா போன்ற பொருள்களை உட்கொள்வோரை புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இதுபோன்ற பழக்கவழக்கம் உள்ளவர்களில் 20 வயதுக்குட்பட்டோர் அதிகளவில் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் பகுதிகளில் அதிகளவில் புற்றுநோய் பாதிக்கிறது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை ரத்தப் புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இந்நோய் பாதிப்பு நகர்ப்புறம், கிராமப்புறம் எனப் பாகுபாடின்றி இருக்கிறது. உடல் பரிசோதனைகள் மூலம் நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகமுடியும்.
20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற்று குணமடையலாம். எலும்பு மஞ்ஞை புற்றுநோய்க்கு, மஞ்ஞை மாற்று சிகிச்சைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நோய் குறித்த பீதி இனி தேவையில்லை. பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, புற்றுநோய் பாதித்தவர்கள் உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சைv மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம். மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் மூலம் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம், என்றனர்.
(di)
கம்ப்யூட்டர் என்பது இன்று அநேகம் பேருக்கு 3வது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்ப்யூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர்.
அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு……இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளாக இருக்கும்.
சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க 20-20-20 விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடிய கண்கள் மேல் வைத்து எடுக்கலாம்.
கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரைப் பார்க்கவும். வறட்சியோட அளவைப் பொறுத்து தேவைப்பட்டால் கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கம்ப்யூட்டர் வேலையில் சேருவதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.
கிட்டப்பார்வையும் இல்லாமல், தூரப் பார்வையும் இல்லாமல் கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப் பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கிறது. ஸ்பெஷல் கோட்டிங்கோடு. நடுத்தரப் பார்வைக்கான அதை கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்க வேண்டும். பாதங்கள் தரையைத் தொடுகிற மாதிரி உட்கார வேண்டும். 90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சரியாக இருக்கும். கம்ப்யூட்டருக்கு ஆண்ட்டிரெப்ளெக்ஷன் மானிட்டர் போடுவது கண்களைப் பாதுகாக்கும். பொதுவாக 40ல் இருப்பவர்களுக்கு, வெள்ளெழுத்தோடு சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காமல் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
(di)
ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இ – மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ – மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்
இ – மெயிலைக் கண்டுபிடித்துச் சாதனை செய்த சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்தே அவரிடம் பேசினோம்:
“”என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.
நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும் இருந்தார்.
எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.
இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.
தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.
நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.
நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் நான் உருவாக்கியவை.
அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.
எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ – மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.
ஆனால் பலர் தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ – மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.
இ – மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம், 1. நான் ஓர் இந்தியன்,
2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்புநிறத்தவன். 5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.
அதற்குப் பின்பு நான்தான் இ – மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற “சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்’.
இ – மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.
1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு ஒரு நாளைக்கு 5000 – 6000 இ-மெயில்கள் வந்தன. அந்த
இ – மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ – மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ – மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ – மெயில்களைப் படித்துப் பார்த்து, அந்த இ – மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ – மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.
அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.
பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.
பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.
எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.
எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான – அதைவிட மேம்பட்ட – பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.
நான் “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.
ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே… 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து “அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்’ (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன். மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்” என்கிறார் சிவா அய்யாதுரை.
அவருடைய கண்டுபிடிப்பான இ – மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, “இன்னோவேஷன் கார்ப்ஸ்’ என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.
“”இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.
இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் – 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்” என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.
“”அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்” என்றார்.
சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி:
கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.
(di)