Tag Archives: தமிழ்நாடு செய்திகள்

மாநில கட்சிகளில் அதிமுக – திரிணாமுல் காங்கிரசுக்கு அதிக இடம்: கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி, பிப். 14–

‘டைம்ஸ் நவ்’ டி.வி.யும், சி.ஓட்டர் அமைப்பும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தின.

இதில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 227 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாநில கட்சிகளின் செல்வாக்கு மிகுந்த மாநிலங்களில், முக்கிய கட்சிகளுக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க. 27 தொகுதிகளின் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. தி.மு.க.வுக்கு 5 இடங்களும், தே.மு.தி.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு 24 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் 14 இடங்களை பெறும்.

காங்கிரசுக்கு 2 இடமும், பா.ஜனதாவுக்கு 1 இடமும், மற்ற கட்சிகளுக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–13, தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி–10, தெலுங்கு தேசம்–10, பா.ஜனதா–2, இதர கட்சி கள்–1.

கர்நாடகா: காங் கிரஸ்–14, பா.ஜனதா–11, ஐக்கிய ஜனதா தளம்–2, ஆம் ஆத்மி–1.

கேரளா: இடது சாரி கூட்டணி–9, காங்கிரஸ்–7, பா.ஜனதா–1, இ.யூ.முஸ்லிம் லீக்–2, கேரளா காங்கிரஸ் (மணி)–1.

மகாராஷ்டிரா: பா.ஜன தா–15, சிவசேனா–15, காங்கிரஸ்–8, தேசிய வாத காங்கிரஸ்–5, இதர கட்சிகள்–4.

ஒடிசா: பிஜூ ஜனதா தளம்–12, காங்கிரஸ்–7, பா.ஜனதா–2.

உத்திரபிரதேசம்: சமாஜ் வாடி கட்சி–20, பகுஜன் சமாஜ் கட்சி–21, பா.ஜனதா–34, காங்கிரஸ்–4, ராஷ்டிரிய லோக் தளம்–1.

பஞ்சாப்: காங்கிரஸ்–6, சிரோன்மணி அகாலித் தளம்–5, பா.ஜனதா–2.

பீகார்: பா.ஜனதா–21, ஐக்கிய ஜனதா தளம்–5, ராஷ்டிரிய ஜனதாதளம்–12, லோக் ஜனசக்தி–1, காங் கிரஸ்–1.

அரியானா: பா.ஜனதா–6, காங்கிரஸ்–1, ஆம் ஆத்மி–1, இதர கட்சிகள்–2.

அசாம்: காங்கிரஸ்–7, பா.ஜனதா–5, இதர கட்சிகள்–2.

இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

(mm)

Advertisements

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட “தமிழ்மொழி’

சிங்கப்பூர் “சாங்கி’ பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு பலகைகளில், “தமிழ்’ மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் “தற்காலிக அனுமதி கடிதம்’ கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

 

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

 

அங்குள்ள “சாங்கி’ பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் “தமிழ்’ மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.

(dm)

“புகைக்கும்’ சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!

” நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, “குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’ என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், “இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்’ என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது.
இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, “”புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,” என்றார்.

 

புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

 

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

 

(dm)

கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்கள்….

கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம் ஒன்றை துவக்கி, அதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியில்லாக் கடன் வழங்கி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் ஒன்று, அம்மாப்பட்டினம். மணமேல்குடி அருகில் உள்ள இக்கிராமத்தில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என, 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 

ஏழைகள்:

இவர்களில் பல குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கும் கீழ், ஏழ்மை நிலையில் உள்ளனர். விவசாயக் கூலி வேலை செய்வது, மீன் வியாபாரம் செய்வது, கயிறு திரித்தல் போன்றவை தான், இவர்களது தொழில். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை நம்பியே, இவர்களது குடும்பம் உள்ளது. ஒரு நாள் வேலைக்குச் செல்லா விட்டால் கூட, இவர்களது பாடு திண்டாட்டம் தான். இதை சமாளிக்க, கந்துவட்டி கும்பலிடம் கையேந்துவதை, அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக, 86 குடும்பத்தினர், கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, மீள முடியாமல், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், கொத்தடிமைகளாக வேலை பார்த்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இஸ்லாத்தின் கொள்கைப்படி, வட்டி வாங்குவது பாவச்செயல் என்பதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள், கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கைகளை துவக்கினர். இதற்காக, 25 பேரை உறுப்பின ராக கொண்ட, “வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையம்’ என்ற, தன்னார்வ அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வி, மருத்துவம், சிறு தொழில் போன்றவற்றுக்கு, 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, வட்டியின்றி கடன் வழங்கி வருகின்றனர். ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஏழ்மை நிலையில் உள்ள அனைவருக்கும், கடன் வழங்குகின்றனர். மொத்தம், கடன் தொகையை, 60 நாட்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான், இவர்கள் விதித்துள்ள நிபந்தனை. இதை ஏற்று, கடன் வாங்கிய அனைவரும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதுவரை, 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். வட்டியில்லாக் கடன் வழங்கும் சேவை துவங்கியது முதல், அம்மாப்பட்டினம் கிராமத்தில், கந்துவட்டி கும்பல் நுழைய தடைவிதிக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக, அக்கிராமத்தை அச்சுறுத்தி வந்த கந்துவட்டி கும்பல், தற்போது அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயக்கம்:

கந்துவட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல், வரதட்சணைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை, அக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் துவக்கியுள்ளனர். இதற்காக, “வரதட்சணை புதைப்பு’ என்ற இயக்கத்தை துவக்கியுள்ள அவர்கள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநாடு மற்றும் பேரணி நடத்தியுள்ளனர். கடலோரக் கிராமங்களை குறிவைத்து, கட்டுமாவடி மற்றும் எஸ்.பி., பட்டினத்தில் துவங்கிய பேரணியில், பெண்கள் உட்பட, 6,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் வரதட்சணை கொடுமைகளுக்கும், விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும், அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வட்டியில்லா பொருளாதார மேம்பாட்டு மையத்தின் தலைவர் முகம்மது இத்திரீஸ் கூறியதாவது: அம்மாப்பட்டினம் கடலோரக் கிராமத்தில், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, 3,000 முதல், 10 ஆயிரம் ரூபாய், வரை வட்டியில்லாக் கடன் வழங்கி வருகிறோம்.

 

ஜாதி, மதம் இல்லை:

கடன் வழங்க நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்று, வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளோம். விரைவில், அப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு முகம்மது இத்திரீஸ் கூறினார்.

 

(dm)

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…இந்தியாவில்…

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை விட, பல மடங்கு வேகமான செயல்திறன் கொண்டதாகவும், கடினமான கணக்குகளையும் வினாடிகளில் செய்யும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர் என அழைக்கப்படுகிறது. இவ்வகை கம்ப்யூட்டர்கள் ராணுவம், விண்வெளி, ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் முதன் முதலாக சூப்பர் கம்ப்யூட்டர் 1960களில் அறிமுகமானது. இந்தியா திட்டமிட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர், தற்போது உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான ஐ.பி.எம்., ன் “செகுயா’ வை விட 61 மடங்கு வேகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 4,700 கோடி ரூபாய். திட்டமிடப் பட்டுள்ள காலம் 5 ஆண்டுகள்.

வேகம் என்ன

petaflop என்பது கம்ப்யூட்டரின் வேகத்தை குறிக்கிறது. ஒரு petaflopஒரு வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. ஒரு டிரில்லியன்க்கு, 1க்கு அருகில் 18 ஜீரோக்களை சேர்க்க வேண்டும். அப்படியென்றால் இதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். 2012ம் ஆண்டின் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எம்., நிறுவனம் தயாரித்த “செகுயா’ என்ற சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம் 16.32 petaflop அதாவது 7.8 லட்சம் அதி வேகமான லேப்டாப் கம்ப்யூட்டர்களை ஒன்றிணைப்பதற்கு சமம். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம், இந்த ஐ.பி.எம்., கம்ப்யூட்டரின் வேகத்தை விட 61 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில், இந்தியா தற்போது 58வது இடத்தில் உள்ளது. இந்தியா முதன்முதலாக 1987ம்ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. நாட்டின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் “பரம்’.

“ டாப் – 5′ :
1993ம் ஆண்டில் இருந்து உலக நாடுகள் தயாரிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எது அதிவேகமானது என, ஆண்டுதோறும் “ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படுகிறது. சமீபத்திய ஐந்து ஆண்டுகளின் சூப்பர் கம்ப்யூட்டர்களை பற்றி பார்க்கலாம்.

ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் வேகம் நாடு
2008 ஐ.பி.எம்., ரோட்ரன்னர் 1.026 petaflop அமெரிக்கா
2009 கேரி ஜாகுவர் 1.105 petaflop அமெரிக்கா
2010 டியான்கி-1ஏ 1.759 petaflop சீனா
2011 பியூஜிட்சு கே கம்ப்யூட்டர் 10.51 petaflop ஜப்பான்
2012 ஐ.பி.எம்., செகுயா 16.32 petaflop அமெரிக்கா

 

(dm)

இதுதா‌‌ண்டா ‌தீ‌ர்‌ப்பு!

பெ‌ற்ற மகளையே க‌ற்ப‌ழி‌க்க முய‌ன்ற த‌ந்தையை மக‌ள் க‌த்‌தியா‌ல் கு‌த்‌தி கொலை செ‌ய்து‌வி‌ட்டா‌ர். ஆனா‌ல் ‌நீ‌திம‌ன்றமோ, கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் மனுதார‌ர் செய்‌திரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று கூ‌றி, அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூ‌றி அவ‌ர் ‌மீதான வழக்கை ரத்து செய்து‌ள்ளது.

சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்த சுதா (பெயர் மாற்ற‌ம்) 19 வயதான சுதா பி.எஸ்சி. ப‌ட்ட‌ப்படி‌ப்பை படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், தந்தையுடன் வசித்து வந்தார்.

கட‌ந்த 2011ஆ‌ம் ஆ‌ண்டு மே 17ஆ‌ம் தே‌தி இரவு வீட்டில் த‌னியாக இரு‌ந்த சுதாவை குடிபோதையில் வீட்டுக்கு வந்த த‌ந்தை கத்திமுனையில் கற்பழிக்க முய‌ன்றா‌ர். அப்போது, தன் கற்பை காப்பாற்ற சுதா கத்தியா‌ல் தந்தையை கு‌த்‌தி‌க் கொலை செ‌ய்தா‌ர்.

த‌ந்தை படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டது கு‌றி‌த்த சுதா‌வி‌ன் சகோதர‌ர் மாங்காடு போலீ‌சி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர். இ‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் சுதா மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தல் (இந்திய தண்டனை சட்டம் 304(2) கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தது போ‌லீ‌ஸ்.

சுதா ‌மீதான வழ‌க்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நட‌ந்து வ‌ரு‌கிறது. வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகையு‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் சுதா மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி நாகமு‌த்து, அ‌திரடியாக ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர். தன் உயிரையும், கற்பையும் பாதுகாக்க இறைவன் கொடுத்த நகம் மற்றும் பற்களை பயன்படுத்தி பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதுபோல, கற்பை காப்பாற்றிக் கொள்ள தன்னை கற்பழிக்க வந்த மிருகமான தந்தையை மனுதாரர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர் சுதாவுக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, சாட்சி வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, மனுதாரர் கத்திமுனையில் தன்னை கற்பழிக்க வந்தவரிடம் இருந்து தன்னை பாதுகாத்துள்ளார் என்று நிரூபணமாகியுள்ளது.

எனவே, இவர் மீதான குற்ற விசாரணை தேவையில்லாதது. இவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தால், அது மனித உரிமை மீறலாகும். எனவே மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று இந்த ‌நீ‌திம‌ன்ற‌ம் முடிவு செய்கிறது.

கற்பை காப்பாற்ற வேண்டிய தந்தையே, மிருகத்தனமாக இதுபோல் நடந்து கொண்டால், எந்த ஒரு பெண்ணும் தன்னை பாதுகாக்க இப்படித்தான் செயல்பட்டு இருப்பார். 80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி சொன்னதைத்தான், இப்போது சுதா செய்துள்ளார். ஒருவேளை, தந்தையை சுதா கொலை செய்யாமல் இருந்தால், அவர் கற்பழிப்பினால், பாதிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.அழகு நேர்மையுடன் செயல்பட்டுள்ளார். அவர் சுதா மீது கொலை வழக்கு பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்யாமல், உள்நோக்கம் இல்லாமல் கொலை சம்பவத்தை விளைவித்தார் என்ற பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளார். அவரது நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

அதேநேரம் மாணவியான இந்த பெண்ணின் வயது, படிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், 40 நாட்கள் தேவையில்லாமல் சிறையில் இருக்க வைத்துள்ளார். என்றாலும், சுதா அதிர்ஷ்டவசமாக தன் படிப்பை பாதியில் விட்டுவிடாமல், தொடர்ந்து படித்து வருகிறார்.

இதுவரை அனுபவித்த துன்பத்தில் இருந்து விடுபடும் விதமாக, சுதா மீதான வழக்கை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்கிறேன் எ‌ன்று ‌நீ‌திப‌தி நாகமு‌த்து அ‌திரடியாக ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

wd

முதன்முறையாக 77 பள்ளி தலைமையாசிரியர்கள் “சஸ்பெண்ட்”!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில், 77 பள்ளி தலைமை ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிரடி யாக, “சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 1,002 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த, ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும், 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆதி திராவிட பிரிவில் சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
போலி கையெழுத்து: அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 2010 – 2011 மற்றும் 2011 – 2012ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை அரசிடம் இருந்து, ஆதி திராவிடர் நலத்துறையினர் பெற்றுள்ளனர். அத்தொகை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் காசோலையாக வழங்கப்பட்டது. அந்த காசோலையை வங்கி மூலம் பணமாக மாற்றி, மேற்குறிப்பிட்ட ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்வி உதவித் தொகை, ஆதி திராவிட மாணவர்களுக்கு முழுமை யாகச் சென்றடையவில்லை. போலிக் கையெழுத்து போட்டு அத்தொகை, 81 லட்சம் ரூபாய் முழுவதையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், “ஸ்வாகா’ செய்துள்ளனர். அதற்கு புரோக்கர்கள் சிலர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பாலமாகச் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை: அந்த குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தும்படி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி

தேவிக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, முதல் கட்ட நடவடிக்கையாக, புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன், மோகனூர் பேட்டப்பாளையம் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி உட்பட மொத்தம் நான்கு பேர், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். அதில், புதுச்சத்திரம் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இம்மோசடி தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சென்ற வாரம் விசாரணை நடத்தினர். அந்த அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா உத்தரவுப்படி, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, “சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள்: இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த

சுகாதாரமற்ற தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளான, 1,016 மாணவ, மாணவியர் மட்டுமே, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால், நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையினர், 2,774 மாணவ, மாணவியர் என, கணக்கு காண்பித்து, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையில் மாவட்ட அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என, மூவர் மட்டும் பணிபுரிகின்றனர். கல்வி உதவித் தொகை கையாடலுக்கு உடந்தையாக இருந்த, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக, 77 பள்ளி தலைமையாசிரியர்கள், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குமரகுருபரன் கூறினார்.
புகார் செய்தால் கைது: எஸ்.பி.,: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பரிந்துரைத்துள்ளார். அதையடுத்து, மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள் உத்தரவுப்படி, உதவித் தொகை வழங்கியது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், “”சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசில் புகார் செய்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்தார்.

dm