site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரூ. 75 லட்சம் எல்லாம் ஒரு ஊழலா? : மத்திய மந்திரி பிரசாத் வர்மா

Posted by sambala87(சூரியன்) on October 16, 2012

“” மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அறக்கட்டளை மூலம், 71 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக, வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். 71 லட்சம், ஒரு தொகையா; 71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தால் தான், கவலைப்பட வேண்டும். இந்த அற்ப தொகைக்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,” என, மத்திய உருக்குத் துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, பெனி பிரசாத் வர்மா, “வியப்பு’ தெரிவித்துள்ளார்.

மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சல்மான் குர்ஷித், உ.பி.,யில்,”ஜாகிர் உசேன் மெமோரியல் டிரஸ்ட்’என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்; இவரது மனைவி லூயிஸ், அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறும், இந்த அறக்கட்டளை, தற்போது கடும் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதற்காக, மத்திய அரசால் மானியமாக அளிக்கப்பட்ட, 71 லட்சம் ரூபாயை, முறைகேடாக பயன்படுத்தியதாக, இந்த அறக்கட்டளை மீது, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யைச் சேர்ந்த, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர்களில், போலியாக கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம், அறக்கட்டளைக்கு தேவையான காரியங்கள் சாதிக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி வரும், அரவிந்த் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதற்காக, டில்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவியும், தங்கள் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.”சல்மான் குர்ஷித்தை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்த லோக்சபா தேர்தலில், எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, மாற்றுத் திறனாளி ஒருவரை, வேட்பாளராக நிறுத்துவோம்’ என, அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவித்து வரும், சல்மான் குர்ஷித்துக்கு, சக அமைச்சரும், காங்., மூத்ததலைவர்களில் ஒருவருமான, பெனி பிரசாத் வர்மா, வாக்காலத்து வாங்கியுள்ளார்.

மத்திய உருக்குத் துறை அமைச்சராக உள்ள, பெனி பிரசாத் வர்மா, டில்லியில் நேற்று அளித்த பேட்டி:சல்மான் குர்ஷித், பொறுப்புள்ள நபர்; மத்திய அமைச்சராகவும் உள்ளார். இதற்கு முன்னும், அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார். இதுவரை, எந்த ஊழல் குற்றச்சாட்டிலும், அவர் சிக்கியது இல்லை. அறக்கட்டளை விஷயத்தில் முறைகேடு நடக்கவில்லை என, அவர் கூறுவதை நம்ப வேண்டும்.சல்மான் குர்ஷித் போன்ற, பொறுப்புள்ள ஒரு தலைவர், 71 லட்சம் ரூபாய்க்காக முறைகேடுகளில் ஈடுபடுவார் என, நான் கருதவில்லை. மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, 71 லட்சம் ரூபாய் என்பது, மிக சொற்பமான ஒரு தொகை. இதற்காக, வெற்றுக் கூச்சல் போடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. அதேநேரத்தில், 71 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்திருந்தால் தான், கவலைப்பட வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்; இந்தியாவில் உள்ள எத்தனையோ கட்சிகளில் இதுவும் ஒன்று. நான் அவருக்கு சொல்வது இதுதான்… காலையில் துவங்கி, மாலை வரை எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால்,

அதற்கு மதிப்பு இருக்காது. சிலநேரங்களில், புலியைப் போல கர்ஜித்தால், அதற்கு கிடைக்கும் மதிப்பே தனி தான்.இவ்வாறு பெனி பிரசாத் வர்மா கூறினார்.

ஊழலுக்கு வக்காலத்து வாங்கியுள்ள, பெனி பிரசாத் வர்மா, சமாஜ்வாதி கட்சியிலிருந்து, காங்கிரசுக்கு தாவியவர். முலாயம் சிங் யாதவ், உ.பி., முதல்வராக இருந்தபோது, அம்மாநில பொதுப் பணித் துறை அமைச்சராகவும், இவர் பதவி வகித்துள்ளார்.

சமீபத்தில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தபோது, ஒட்டு மொத்த நாடும், அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்க, பெனி பிரசாத் வர்மாவோ,”உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பதை வரவேற்கிறேன். இதனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இது, ஆரோக்கியமான விஷயம் தானே’என, “தத்துவார்த்தமாக’ பதில் அளித்து, ஏற்கனவே ஒருமுறை சர்ச்சையில் சிக்கிய அனுபவமும் கொண்டிருப்பவர்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: