ஊழல்… ஊழல்! நிலக்கரி சுரங்க ஊழல் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஏலமில்லாமல் இஷ்டத்துக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கிய வகையில் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு என்று இந்திய தலைமை தணிக்கை குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி விமான நிலைய கட்டுமானத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.24,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் நாட்டில் நடைபெற்று வரும் மின் திட்டங்களில் அரசும் தனியாரும் போட்டுக் கொண்டுள்ள லாபப் பகிர்வு ஒப்பந்தங்களின் படி அரசுக்கு ஏராளமான இழப்பு என்றும் இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தணிக்கை குழு அறிக்கை அறிவித்துள்ள நிலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி ஊழலில் 1,76,000 கோடி அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கொடி பிடித்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் ஏற்பட்டுள்ள 10 லட்சம் கோடி இழப்பிற்கு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் அடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 44 பில்லியன் டனக்ள் நிலக்கரி அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 194 நிலக்கரி பிளாக்குகள் வெறும் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வரைவு அறிக்கையைப் போல் அல்லாமல் தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இந்த முழு அறிக்கையில் நிலக்கரி முறைகேட்டில் பிரதமர் அலுவலகத்திற்கு உள்ள தொடர்பை குறிப்பிடாமல் மறைத்துள்ளது.

இந்த நிலக்கரி முறைகேட்டில் பயனடைந்த நிறுவனங்கள் வருமாறு: டாடா குழுமம், ஜிண்டால் ஸ்டீல் அன்ட் பவர், அனில் அகர்வால் குழுமம், எஸ்ஸார் குழுமம், அடானி குழுமம், ஆர்சலர் மிட்டல் மற்றும் லான்கோ ஆகியவையாகும்.

ஏல நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளில் வேண்டுமென்றே தாமதம் செய்து இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஏற்படுத்திக் கொள்ள வழி வகை செய்துள்ளது மத்திய அரசு.

டெல்லி விமான நிலைய முறைகேடு:

டெல்லி விமான நிலைய கட்டுமானத்திற்காக ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான டெல்லி இன்டெர்னேஷனல் ஏர்போர்ட் நிறுவனத்திற்கு 239 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது சந்தை விலைக்கு அளிக்கப்படாமல் குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை ரூ.24,000 கோடி. இது அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு.

60 ஆண்டுகால குத்தகை காலத்தில் சுமார் ரூ.1,63,557 கோடி வருவாய் ஈட்டித் தரும் சக்தி உள்ள இந்த நிலம் ஆண்டுக்கு ரூ.100 என்ற தொகைக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சீப்பாக நிலத்தை வாங்கிய பிறகும் ஜி.எம்.ஆர்.நிறுவனம் விமானப் பயணிகளிடமிருந்து பயனாளர் மேம்பாட்டு கட்டணம் வசூலித்து வருகிறது!
இந்த வசூல் மூலம் அந்த நிறுவனம் ரூ.3400 கோடி வருவாய் பெற்றுள்ளது!! பயனாளர் மேம்பாட்டு கட்டணம் வசூலிப்பது முதல் ஒப்பந்தத்தில் இல்லை, பிறகு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது.

மேலும் இந்தத் தொகையை விமானநிலைய சலுகை ஒப்பந்தத்திற்கு விரோதமாக திட்டச் செலவுகளுக்கும் இந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இந்த நிறுவனம் தனக்கு வந்துள்ள வருவாய் அரசுக்கான செலவு இன்னின்ன என்று கோரும்போதும் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட் டெவலப்மெண்ட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு எதிராக இதனைச் செய்யும்போதெல்லாம் அமைச்சகமும், விமானநிலைய ஆணையமும் நிறுவனத்திற்குச் சாதகமாக ஒப்பந்த விதிகளுக்கு வியாக்யானம் வேறு அளித்துள்ளதாக தலைமை தணிக்கைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. அதாவது அரசின் நலன்களுக்கு எதிராக!!

மின் திட்டங்கள்:

நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு மின் திட்டங்கள் குறித்தும் தலைமைத் தணிக்கைக் குழு சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் சாசன் மின் திட்டத்தில் டிபரென்சியல் டாரிஃப் (differential Tariff) வகையில் அந்த நிறுவனம் ரூ.29,000 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது என்று கூறியுள்ளது மத்திய தலைமை தணிக்கைக் குழு.

ஏல நடைமுறைகளில் முறைகேடு இருப்பதால், சாசன் மின் திட்டத்திற்காக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 நிலக்கரி பிளாக்கிலிருந்து அந்த நிறுவனம் அளவுக்கு அதிகமாக நிலக்கரியை பயன்படுத்தியுள்ளது.

2006ஆம் ஆண்டு அக்டோப்ரில் சாசன் மின் திட்டத்தில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ஒதுக்கப்பட்ட இரண்டு நிலக்கரி பிளாக்குகள் எப்படி போதாது என்று மின்சார அமைச்சகம் முடிவு செய்தது? என்று கேள்வி எழுப்புகிறது தலைமைத் தணிக்கைக் குழு அறிக்கை.

மேலும் 3வது நிலக்கரி பிளாக்கை என்.டி.பி.சி.யிடமிருந்து பிடுங்கி ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு கொடுத்ததற்கான அடிப்படைகள் தெளிவாக இல்லை என்று சாடியுள்ளது.

(wb)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s