கொள்ளை லாபத்தில் மருந்துகளை விற்கும் மருந்துக் கம்பெனிகள்!

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பல மருந்துகள் 500%க்கும் மேலாக லாபம் வைத்து விற்கப்படுவதாக மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய கம்பெனிகளால் தயாரிக்கப்படும் மிகவும் சாதாரண மருந்துகள் கூட 500 சதவீத லாபத்திற்கு விற்கப்படுகின்றன.

சில மருந்துகள் 1122 சதவீத லாபத்திற்கு விற்கப்பட்டு மருந்து நிறுவனங்கள் கொள்ளையோ கொள்ளை நடத்தி வருகின்றன.

இந்தக் கொள்ளையை தடுட்த்கு நிறுத்தி மக்களுக்கு நியாயவிலையில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த அமைச்சகம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தயாரிப்பு செல்வலிருந்து 50% அல்லது 100% அல்ல 500 முதல் 1122% வரை லாபம் அடிப்பது என்றால் அது என்னவகை கொள்ளையில் சேரும் என்று தெரியவில்லை.

உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் சைலோரிக் என்ற மருந்தை உற்பத்தி செய்யும் ஜி.எஸ்.கே. நிறுவனம் அந்த மருந்தை 1122% லாபத்திற்கு விற்று கொள்ளை அடித்து வருகிறது.

இந்தியாவின் நம்பர் 1 மருந்து நிறுவனமான ரான்பாக்சி தயாரிக்கும் பிரபலமான ‘ரீவைட்டல்’ என்ற மாத்திரைகள் 858% அதிக லாபத்தில் வைத்து விற்கப்படுவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.

ரான்பாக்ஸியின் லாபத்தில் கணிசமாக பங்கு வகிக்கும் சிப்ரோபிளாக்சசின் என்ற ஆண்டி பயாடிக் மருந்தான சிஃப்ரான் என்ற மாத்திரைகள் 423% லாபம் வைத்து விற்கப்பட்டு வருகிறது.

யு.எஸ்.வைட்டமின்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கிளைகோமெட் என்ற மருந்து 746% லாபம் வைத்து விற்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் தேசிய மருந்க் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின் படி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆகும் செலவை விட 100% லாபம் மட்டுமே வைத்து விற்கவேண்டும்.

ஆனால் இந்த விதிமுறைகள் கன்னாபின்னாவென்று மீறப்பட்டுள்ளது. இதனை ஏன் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. தேசிய மருந்து குஅட்டுப்பாட்டு ஆணையம் என்ன வாங்கிக் கொண்டு இதனை அனுமதித்தது?

தற்போது அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வுகள் பற்றிய 6 பக்க அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

என்னதான் ஒரு நிறுவனம் ஒரு நோய்க்காக பிரத்யேக ஆய்வு மேற்கொண்டு ஒரு மருந்தைக் கண்டுபிடித்துத் தயாரித்தாலும் அதனை விற்பது அவ்வளவு எளிதல்ல. எனவேதான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்ச்சல், தலைவலி மருந்துகள், சர்க்கரை நோய் தடுப்பு மருந்துகள், ரத்த அழுக்த்த குறைப்பு மாத்திரைகள், உடற்சத்தை அதிகரிக்கச்செயும் மருந்துகள் மாத்திரைகளில் இந்த நிறுவனங்கள் இத்தகைய கொள்ளை லாபங்களை ஈட்டி வருகின்றன.

நம் நாட்டில் இதற்கென்றே ஒரு திட்டம் உண்டு. அது பெயரளவில் மட்டுமே இயங்கும் – அதுதான் ஐந்தாண்டு திட்டம் என்ற ஒன்று. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் அத்தியாவசிய மருந்துகள் மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கும் வகையில் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடனடியாக அந்த திட்டத்தை கறாராக அமல் செய்து கொள்ளை லாபம் ஈட்டி இந்திய ஏழை மக்களை சுரண்டி கொழுத்துள்ள நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நாடாளுமன்றம் என்ற ஒன்றில் ஏதோ ஒன்றைப்பற்றி கத்திக் கதறி கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சிகள் மக்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இத்தகைய போக்குகள் பற்றி ‘மருந்திற்கு’ கூட வாயைத் திறப்பதில்லை.

ஊழல் எதிர்ப்பு ஜாம்பவானான அன்னா ஹசாரேயின் எதிர்ப்பு பிரபல அரசியல்வாதிகளை எதிர்த்து மட்டுமே இருப்பதால் அவர் புகழ்தான் ஓங்குகிறதே தவிர மக்களுக்கு அதனால் எந்த வித தீர்வும் ஏற்பட்டுவிடவில்லை.

ஒரு மருந்தை கொள்ளைலாபத்தில் விற்றால் அதனை வாங்கும் கடைநிலை அரசு ஊழியன் லஞ்சம் வாங்காமல் எப்படி அதனை வாங்க முடியும்? லஞ்சம் வாங்கும் கடைநிலை ஊழியனை எதிர்த்து வாய் கிழிய பேசும் ஊழல் எதிர்ப்பாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட உதிர்ப்பதில்லையே ஏன்?

எல்லா சட்ட, விதிமுறைகளையும் தளர்த்தாகிவிட்டது. தாராளமயவாதத்தின் பெயரில் கேள்வி கேட்பாரில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது நாடு, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று மக்களை ஆக்கி வைத்துள்ளது புழுத்துப்போன இந்திய அரசியல், சமுதாய ஒழுங்கமைப்பு.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கு இவ்வளவுதான் தொகை வசூலிக்கப்படவேண்டும் என்ற விதிமுறை ஏதாவது உள்ளதா? வியாதிகளின் பெயரை ஏதோ ஓட்டல் தின்பண்டங்கள் போல் பட்டியலிட்டு அதற்கு நேராக விலையைப் போடாதது ஒன்றுதான் குறை. அதுவும் சில மருத்துவமனைகளில் இருப்பதாகக் கேள்வி.

கேடராக்ட் ஆபரேஷனா விலைப்பட்டியைல் ரூ.25,000 என்று இருக்கும் மெனுக்களையும் சிலர் பார்த்திருக்கலாம். நோயின் தீவிரம் போன்ற எண்ணற்ற கூறுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அதன்பிறகு கட்டணம் நிர்ணயிப்பது போய் தற்போது ‘சார் பைபாஸ் அறுவை சிகிச்சையா உடனடியாக 3 லட்சத்தை எடுங்கள்’ என்ற நிலைதான் இருந்து வருகிறது.

இத்தகைய நேர்மையற்ற, சுயலாப தற்குறிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காக்கப்போவது யார்?

wd

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s