ஹசாரே கருத்துக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தாக்கி பேசக்கூடாது என்ற ஹசாரே, ராம்தேவின் கருத்துக்களை ஏற்க அன்னா குழுவின் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்க மறுத்து விட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்களை அமைக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை, சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவைச்சேர்ந்த,அர்விந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும் டில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 25ம் தேதி துவக்கினர்.

மூன்றாவது நாளக நேற்று நடந்த போராட்டத்தின் போது, தனது ஆதரவாளர்களுடன் வந்த யோகா குரு பாபா ராம்தேவ், அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு எனது ஆதரவு எப்போதும் உள்ளது. அதே நேரத்தில் எவரையும் தாக்கிப்பேசக்கூடாது. ஜனாதிபதி பதவி என்பதுஅரசியல் சட்ட பதவி. அந்த அரசியல் சட்ட பதவி வகிப்பவரை யாரும் விமர்சிக்கக் கூடாது. இதனை அன்னா ஹசாரேவும் ஏற்றுக் கொண்டுள்ளார் எனக்கூறினார்.

இந்நிலையில் இன்று பேட்டியளித்த அன்னா ஹசாரேவும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

இந்நிலையில் இவர்களது கருத்துக்களைஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் கெஜ்ரிவால்.

ஜந்தர் மந்தர் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், ஒரு சிலர், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியான பின்பு அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்துபேசக்கூடாது என கூறுகின்றனர். இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார். கெஜ்ரிவால் இவ்வாறு கூறிய போது ஹசாரே மேடையில் இருந்தார். கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது: ஜனாதிபதி பதவியில் ராஜேந்திர பிரசாத், அப்துல் கலாம் ஆகியோர் அமர்ந்து அழகு பார்த்தனர். ஆனால் தற்போது ஜனாதிபதி பதவி தனது மதிப்பை இழந்துவிட்டது. அம்பேத்கார், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இடம்பெற்ற பார்லிமென்டை மதிக்கிறேன். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள லாலு பிரசாத், முலாயம் சிங், கனிமொழி இடம்பெற்றுள்ள பார்லிமென்டை மதிக்க மாட்டேன் என கூறினார்.

மேலும் அவர், ஜனாதிபதி மறறும் பார்லிமென்ட் ஆகியவை கடவுளை விட உயர்ந்தது அல்ல. தேச நலனுக்காக எங்களை துரோகி என கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என கூறினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s