சர்க்கஸ் கூடாரம் போல் “டெசோ’ மாநாடு !

சர்வதேச அரங்கில் அழுத்தம் கொடுக்கக் கூடிய நாடுகளின் பிரதிநிதிகளை அழைக்காமல், சிறிய நாடுகளின் பிரதிநிதிகளை, “டெசோ’ மாநாட்டிற்கு தி.மு.க., அழைத்துள்ளது; இதனால், எவ்வித பலனும் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு’ (டெசோ) சார்பில், “ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு’ ஆய்வரங்கம், அடுத்த மாதம் 12ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில், இலங்கை தமிழர் தலைவர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்பு பிரதிநிதிகளை ஒன்று திரட்ட தி.மு.க., ஆசைப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழ் பிரதிநிதிகளை, சென்னைக்கு அழைத்து வரும் பணிகளில் சுப.வீரபாண்டியன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜின்னா போன்றவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் வீசிய தூண்டிலில், நைஜீரியா, மெராக்கோ, துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே சிக்கியுள்ளனர். இது குறித்து, “முரசொலி’ நாளிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, மாநாட்டின் செயல்பாட்டை பறைசாற்றியுள்ளது தி.மு.க., தலைமை. நைஜீரிய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஒசிகேனா போய் டொனால்டு , அந்நாட்டை சேர்ந்த எம்.பி., அப்துல்ரசாக் மோமோ, சுவீடன் நாட்டிலிருந்து நசிம் மாலிக், மொராக்கோ எம்.பி., டைடா முகம்மது, பன்னாட்டு மனித உரிமை ஆணையத்தின் கிழக்கு ஐரோப்பா துருக்கியின் தூதர் கெமால் இல்திரிம், மொராக்கோ நாட்டின் தேசிய கவுன்சிலர், உண்மை மற்றும் நீதிக்கான ஆணையத்தின் தலைவர் அபெகா முபாரக் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பதாக “டெசோ’ அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களின் பெயர்களோடு, நாடு குறித்து மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பதவிகள் குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம். “டெசோ மாநாடு ஒரு ஷோ’ என,

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஏற்கனவே வர்ணித்துள்ள நிலையில், தற்போதைய பங்கேற்பாளர்கள் பட்டியல் குறித்து, ம.தி.மு.க., பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: “டெசோ’ மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றால் பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, ஆங்சாங் சூகி போன்ற தலைவர்களை அழைத்திருக்கலாம். அவர்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள். சுய சார்பு இல்லாத, சிறிய நாடுகளின் எம்.பி.,க்களை அழைத்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களால் சர்வதேச அளவில் எந்த அழுத்தத்தையும் தர முடியாது. குறைந்தபட்சம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் எம்.பி.,க்களை அழைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். முன்னணி நாடுகளின் பிரதிநிதிகள், தமிழர் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்காததன் மூலம், தி.மு.க.,வின் வேடம் குறித்து அவர்களும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது. சர்க்கஸ் கூடாரம் போல், சம்பந்தமில்லாதவர்களை நிறுத்தி, ஷோ நடத்தப் போவதைத்தான் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s