site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இந்தியா செய்த உதவிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜபக்ஷே…..

Posted by sambala87(சூரியன்) on March 26, 2012

இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது குறித்து, பெயரளவில் கூட நன்றி தெரிவிக்காத அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், பயங்கரவாத விளைவுகளைப் பற்றி, எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது.ஆனால், இலங்கை தனது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துகிறதா என்பதை, மனித உரிமைகள் கவுன்சில் கண்காணிக்க வேண்டும், அதற்கான தொழில்நுட்ப உதவிகளை, இலங்கை கவுன்சிலிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என, அமெரிக்கா சேர்த்திருந்த வரிகளில், இந்தியா திருத்தம் கொண்டு வந்தது.அதன்படி, இலங்கையின் விருப்பப்படி தான் கவுன்சில், அந்நாட்டிற்கு உதவி அல்லது கண்காணிப்பு செய்ய முடியும். இது, இலங்கைக்கு மிகவும் சாதகமான திருத்தம்.இந்த திருத்தம் குறித்து, இலங்கை அமைச்சர்கள் ஒரு சிலர் மட்டும், மிகவும் மென்மையான குரலில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மான விவகாரத்திற்குப் பின், முதன்முதலாக, நேற்று முன்தினம் பேசிய அதிபர் ராஜபக்ஷே, தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த, 15 நாடுகளுக்கும், ஓட்டளிக்காமல் இருந்த 8 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.அதே நேரம், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், பயங்கரவாத விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என, எச்சரிக்கையும் விடுத்தார். மருந்துக்குக் கூட, இந்தியாவையோ அதன் திருத்தத்தையோ பாராட்டி, அவர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.மேலும், இலங்கை விவகாரத்தில், எந்த ஒரு அன்னிய சக்தியும் தலையிட முடியாது என, திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: