site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

சிதம்பரம் மீதான புகார் ; முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்தார் சாமி

Posted by sambala87(சூரியன்) on January 7, 2012

பல கோடிகளை விழுங்கி நிற்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீதான ஆதார நகலை இன்று சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த ஆதாரங்கள் கோர்ட்டு ஏற்று கொள்ளும் பட்சத்தில் இவரை விசாரிப்பதும், குற்றவாளிகளில் ஒருவராக சேர்ப்பதுமான முடிவுகள் எடுக்கப்படும்.
தொலை தொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார். நிதி அமைச்கத்திற்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்திருக்காது என்றும், இவர் நினைத்திருந்தால் ராஜா ஊழல் புரியமால் தடுத்திருக்கலாம் என்றும் , இதன் மூலம் ராஜா குற்றம் புரிய துணை புரிந்திருக்கிறார் எனவே ராஜா எப்படி ஒரு குற்றவாளியோ அது போலத்தான் சிதம்பரமும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தி வருகிறார். இவரையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வலியுறுத்தியும், இது தொடர்பாக நிதி துறை இயக்குனர் மற்றும் சி.பி.ஐ, இயக்குனரை விசாரிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் சாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ..பி..,சைனி மனுவை ஏற்றுக்கொண்டு சாமி தனது தரப்பு ஆதாரங்களை கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதி அளித்தார். கடந்த மாதத்தில் நடந்த விசாரணையின்போது சிதம்பரம் மீதான ஆதாரங்கள் சர்டிபிகேட் சான்றாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்று ஆவணங்களை தாக்கல் செய்தார்.

கோர்ட்டில் ஆஜரான சு. சாமி, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், ராஜா ஆகியோர் என்ன பேசிக்கொண்டனர். எந்த விதமான கடிதங்கள் பரிமாறப்பட்டது , இது தொடர்பாக பார்லி.,யில் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்ன, காபினட் கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யும் உரிமை உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பை விளக்கினேன் என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: