கறுப்பு பணம் வைத்துள்ளதாக 17 இந்தியர்கள் ஒப்புதல்

மும்பை : சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ளதாக 17 இந்தியர்கள் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. முறையாக வரி செலுத்தினால் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என தெரிகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 700 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் வழங்கியது. ஒவ் வொருவருடைய கணக்கி லும் ரூ.50 கோடி முதல் ரூ.300 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.

வருமானவரித் துறை, வரி ஏய்ப்பு செய்த 700 பேர் மீது வழக்கு தொடர்வதற்கு பதில், நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாடுகளில் டெபாசிட் செய்துள்ள முதலீடு பற்றி தகவல் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. காரணம் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் அந்த பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல. அதாவது, எச்எஸ்பிசி வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியலை பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில், பலர் Ôதிருத்தப்பட்ட வரிப்படிவம்Õ தாக்கல் செய்யப் போவதாக வரு மானவரித் துறையிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தாக்கல் செய்த வரிப்படிவத்தில் தவறு இருந்தால் அதைத் திருத்தம் செய்து தாக்கல் செய்வதற்காக இந்த வாய்ப்பை வருமானவரித் துறை வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 17 பேர் வெளிநாட்டில் பணத்தை பதுக்கி உள்ள 700 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தாமாக முன்வந்து வரி செலுத்துவோர் மீது சிறிய அளவில் மட்டுமே நடவடிக்கை எடுப்பது என வருமானவரி துறை முடிவு செய்துள்ளது.

இந்தியா & சுவிட்சர்லாந்து இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கடந்த 2010 ஆகஸ்ட் மாதம் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்த திருத்தம் 2012 ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, சட்டவிரோதமாக சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களை கேட்டு பெற முடியும்.
வரி ஏய்ப்பை தடுப்பதற்கு இது உதவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s