site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

புது பார்முலா: உதிரி கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்க அ.தி.மு.க., – தி.மு.க.,

Posted by sambala87(சூரியன்) on October 30, 2011

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., – காங்., – பா.ம.க., – ம.தி.மு.க., – பா.ஜ., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், அடுத்த லோக்சபா தேர்தலில் இந்தக் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதி வழங்க முடியும் என்ற புது பார்முலாவை, அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய கட்சிகள் கணித்துள்ளன.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., 39.03 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரம் முன், தமிழக அரசின் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது, லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனை நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு கூடுதல் ஓட்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளது.சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு கிடைத்த 22 சதவீதம் ஓட்டுகள், உள்ளாட்சித் தேர்தலில் 26.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியை பொருத்தவரையில் 30 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள தி.மு.க., புள்ளிகள் தேர்தல் பணியில் ஈடுபடாமல் பதுங்கி, ஓடி விட்டதால், கருணாநிதியின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.

தே.மு.தி.க.,வுக்கு 7 அல்லது 8 சதவீதம் கிடைக்கும் என, ஆளுங்கட்சி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. தே.மு.தி.க.,வுக்கு 10.1 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. ஆனால், பா.ம.க., தலைமையுடன் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நெருக்கமாக இருப்பது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை.இதனால், அக்கட்சியின் ஓட்டுகள் வட மாவட்டங்களில் தே.மு.தி.க.,வுக்கு கூடுதலாகக் கிடைத்துள்ளது. தற்போது தே.மு.தி.க.,வுக்கு லோக்சபா தேர்தலில் கூட்டணி தலைமையிடம் எட்டு முதல் ஒன்பது எம்.பி., சீட்டுகள் வரை பேரம் பேசுவதற்கு தகுதி கிடைத்துள்ளது.காங்கிரஸ் 5.71 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. இக்கட்டான இந்த தேர்தலில் கட்சியின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என, கோஷ்டித் தலைவர்கள் யாரும் அக்கறை செலுத்தவில்லை. தேர்தல் செலவுக்கு கட்சியின் தலைமையும் பணம் வழங்கவில்லை. உ.பி., மாநிலத்தில் ராகுல் பிரசாரத்திற்குச் சென்றது போல தமிழகத்திற்கு அவர் வரவில்லை என்ற குறை எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் ஐந்து எம்.பி., சீட்டுகள் பெற, அக்கட்சி தகுதி பெற்றுள்ளது.

ஜாதியை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ம.க., 3.55 சதவீதம் ஓட்டுகளை பெற்று, லோக்சபா தேர்தலில் மூன்று சீட்டுகள் பெற தகுதி அடைந்துள்ளது. பா.ம.க., எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்தக் கூட்டணிக்கு 3.55 சதவீதம் ஓட்டுகள் முழுமையாகக் கிடைப்பதில்லை. வன்னியர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் பிரிந்து விடுகின்றன.பா.ஜ.,வை பொருத்தவரையில் சந்தடி சத்தம் இல்லாமல் தனது கட்சியின் ஓட்டு வங்கியை 1.35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அடுத்த பிரதமர் யார்? என்பதை அடையாளம் காட்டும் அகில இந்திய கட்சி என்ற முறையில், லோக்சபா தேர்தலில் இரண்டு எம்.பி., சீட்டுகளை பெற தகுதி பெற்றுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு 12 சீட்டுகள் தான் ஒதுக்கீடு செய்ய முடியும் என அ.தி.மு.க., தலைமை கணித்த கணிப்பு, இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. அக்கட்சி 1.69 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளதாலும், வைகோவின் பிரசாரத்தின் வலிமைக்காகவும் அக்கட்சி லோக்சபா தேர்தலில் இரண்டு சீட்டுகளை பெற தகுதியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.02 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 சதவீதத்திற்கும் குறைவாக பெற்றிருப்பதால், தலா ஒரு சீட்டு அக்கட்சிகளுக்கு கிடைக்கவுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்டு ஒதுக்கீடு செய்யலாம் என்ற கணக்கை அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய கட்சிகள் கணித்துள்ளன. இந்த புது பார்முலா அடிப்படையில் தான், அடுத்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: