site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஊழலை ஒழிப்பது எப்படி? ஜனாதிபதி யோசனை……

Posted by sambala87(சூரியன்) on October 30, 2011

உரிய நேரத்தில் பணிகளை நிறைவேற்றுதல், வெளிப்படையான போக்கு, நம்பகத் தன்மை போன்ற பன்முகத் தன்மை கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், ஊழலை அடியோடு ஒழிக்க முடியும்’ என, ஜனாதிபதி பிரதிபா பேசினார்.

டில்லியில் நடந்த அனைத்து மாநில கவர்னர்கள் மாநாட்டில், ஜனாதிபதி பிரதிபா பேசியதாவது: அதிகரித்து வரும் ஊழல்கள், நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது. சட்டம், ஒழுங்கையும், இது பெரிதும் பாதிக்கிறது. சமூக வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.பொது நிர்வாகத்தின் மீது, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைந்து விடுகிறது. சிறப்பான நிர்வாகத்துக்கும் பெரும் சவாலாக உள்ளது. முதலீட்டையும் பாதிக்கிறது. இவை அனைத்தையும் விட, சாதாரண மக்கள், இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும். இதற்கு, பன்முகத் தன்மையுடைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அரசுப் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுதல், நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுதல், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், விதிமுறைகளை எளிமையாக்குதல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள், ஊழலை ஒழிப்பதற்கு மிகவும் உதவும்.கல்வி நிறுவனங்களுக்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சில பழைய மாணவர்கள், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதிய மாணவர்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பல மாநிலங்களில் ராகிங்கை தடுக்க, சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ராகிங்கிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ராகிங்கை தடுப்பதில், கல்வி நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், முக்கிய பொறுப்பு உள்ளது. ராகிங்கிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, பிரதிபா பேசினார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: