காங்கிரசுக்கு 200க்கு 2, தேமுதிகவுக்கு வெறும் 1….

சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுகவின் சைதை துரைசாமி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

சென்னையில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர் பதவிகளில் 168 இடங்களில் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளது. திமுக 24 வென்றுள்ள நிலையில் மிகக் கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் மற்றும் தேமுதிக தான்.

கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் ஜெயித்து பதவிகளைப் பிடித்து வாழும் காங்கிரஸ் இந்த முறை தனித்து விடப்பட்டதால் 2 கவுன்சிலர் பதவிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதே போல நாங்கள் தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு பேசி வந்த விஜய்காந்தின் தேமுதிக, ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்று படு கேவலமான தோல்வியை அடைந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை நகரில் பல பகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு குவிந்திருப்பதாக மார்தட்டி வரும் டாக்டர் ராமதாசின் பாமகவுக்கும் ஒரே ஒரு இடம் தான் கிடைத்துள்ளது.

தனித்து நின்றால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என கருதப்பட்ட மதிமுக கூட ஒரு இடத்தில் வென்றுள்ளது.

மேயர் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்:

மொத்த வாக்குகள்-23,15,186

சைதை துரைசாமி (அதிமுக)- 12,40,340

மா.சுப்பிரமணியன் (திமுக)- 7,20,593

வேல்முருகன் (தேமுதிக.)- 1,42,203

சைதை ரவி (காங்கிரஸ்)- 62,772

ஏ.கே.மூர்த்தி (பாமக.)- 47,327

என்.மனோகரன் (மதிமுக)- 36,418

அமீர் ஹம்சா (விடுதலை சிறுத்தை கூட்டணி)- 16,170

அப்துல் பாரூக் (சுயேச்சை)- 13,186

பரமேஷ் பாபு (பகுஜன் சமாஜ்)- 10,452

தாசப்பிரகாஷ் (சுயேச்சை)- 9,575

சரத்பாபு (சுயேச்சை)- 8,004

இதனால் திமுக தவிர்த்து எந்தக் கட்சிக்கும் டெபாசிட் கூட மிஞ்சவில்லை.

கவுன்சிலர் பதவிகள்-கட்சிகள் வென்ற இடங்கள்:

மொத்த வார்டுகள் -200

அதிமுக- 168

திமுக- 24

காங்கிரஸ்- 2

தேமுதிக- 1

பாமக- 1

மதிமுக- 1

விடுதலை சிறுத்தைகள்- 1 (சென்னை மாநகராட்சியில் இந்தக் கட்சிக்கு இது முதல் வெற்றியாகும்)

சுயேச்சைகள்- 2

அதே போல பெரும்பாலான சென்னை புற நகர்ப் பகுதி நகராட்சிகள், பேரூராட்சிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s