எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் : விஜயகாந்த்……

“”ஜாதி, மதம், பணம் அரசியலில் எடுபடாது, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்வதால் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்,” என, ராஜபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ராஜபாளையம் நகராட்சி தலைவர் தே.மு.தி.க., வேட்பாளர் சுப்பிரமணிய ராஜா உள்ளிட்ட பல வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: உள்ளாட்சி பதவி என்பது கவுரவமானது, சம்பளம் கிடையாது. மின்சாரம், குடிநீர், டாக்டர் சேவை, ரேஷன் கடை 24 மணிநேரமும் கிடைக்கும், என்பார்கள். சத்தியம் கூட செய்வார்கள். அது நடக்காது. உள்ளாட்சியில் மத்திய, மாநில அரசு பணம் ஏராளமாக உள்ளது. நீங்கள் கட்டும் வரிகளில் சில உள்ளாட்சிக்கு செல்கிறது.

ரத்தடியில் இன்றும் பள்ளி வகுப்பு நடக்கிறது. கல்லூரி சென்றால் லஞ்சம் கேட்கிறார்கள். வங்கி கடன் என்பது குழப்பமாக உள்ளது. தோட்டம், கிணறை அடகு வைத்து கல்லூரியில் படிக்கும் நிலை உள்ளது. மக்களை நாம் கவனிக்காததால், மக்கள் நம்மை கவனித்து விட்டார்கள் என்ற சூழல் உருவாகவேண்டும். எனது பிறந்தநாளுக்கு பெண் குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறேன். ஏழைகளுக்கு உதவுபவன் தான் மக்கள் மனதில் நிற்பான்.

நான் யாரையும் லஞ்சம் வாங்க, கொள்ளையடிக்க விட மாட்டேன், மார்க்சிஸ்ட் கட்சியும் அப்படித்தான். ஜாதி, மதம், பணம் அரசியலில் எடுபடாது. மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். தேர்தலில் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், என்றார். பாண்டியராஜன் எம்.எல்.ஏ.,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s