site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அடுத்த ஆண்டு ‘ராணா’ படத்தை வெளியிட முடியும்…கே.எஸ்.ரவிக்குமார்

Posted by sambala87(சூரியன்) on October 5, 2011

‘ராணா’ படம் கைவிடப்படவில்லை எ‌ன்று‌ம் நடிக‌ர் ரஜினிகா‌ந்‌த் குணமாகி வந்து நடிப்பார் என்று‌ம் அ‌‌ந்த பட‌த்‌தி‌ன் இய‌க்குன‌ர் கே.எஸ்.ரவிக்குமார் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ரஜினிகா‌ந்‌த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ‘ராணா’ படம் கைவிடப்பட்டிருப்பதாக வெளியாகிற தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. உடல் நலக்குறைவால் ஒருவர் பாதிக்கப்படுவது இயற்கை.

‘ராணா’ படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படம். அவரது சிந்தனையில் உதித்த படம். எனவே இந்தப்படத்தை வெற்றிகரமாக கொண்டு வருவதில் அவர் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.

ரஜினிகா‌ந்‌தின் உடல் நலக்குறைவு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் உடல் நலம்பெற்று வருவதில் உறுதியாக உள்ளார். மேலும் ஜூலை மாதத்துக்கு பிறகுதான் தீபிகா கால்ஷீட் தந்துள்ளார்.

எனவே இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக வருகிற தகவல்கள் தவறானவை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் வேகமாக உடல் நலம்பெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ‘ராணா’ படத்தை வெளியிட்டு விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் எ‌ன்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

(wd)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: