பொட்டும் பூவும் உயிரைப் பறித்தது…… தூக்கில் தொங்கிய மாணவி

பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றதால், ஆசிரியையின் தண்டனைக்கு ஆளான மாணவி, அவமானத்தில் தூக்கில் தொங்கினார். இது அம்பத்தூர் – பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடி-க்கு அருகே புதூரில் உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார்.

‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா.

’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்…” என்றார் சுதா.

அடுத்து அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.

”உடனே நாங்கள் ரம்யாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் டாக்டர்கள் அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்றார் அவர்களின் உறவினர் வி.பிரகாஷ்.

ரம்யாவின் தந்தை டி.விஜயகுமார் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர், ’அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..” என்றார் வருத்தத்துடன்.

ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா.

சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

இயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

(di)

………………………
இந்து பள்ளிகளில் பூ வைக்கக் கூடாது என்று சொல்லுவது அனைவரும் சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக. ஆனால் இந்தப் பள்ளியில் மதம் மட்டுமே பிரதானமாக இருந்துள்ளது.அடேய் மணி இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குதுடா.
By கே.சுரேஷ்
9/25/2011 5:34:00 PM

ஆசிரியை – இது உயர்ந்த அர்த்தத்தைத் தரும் சொல்- உபாத்தியாயினி வரம்பு மீறிய சொற்களைப் பிரயோகித்திருக்காவிட்டால் இந்தச் சிறுபெண் பொறுத்துக் கொண்டிருந்திருப்பாள். இந்த உபாட்தியாயிநியைச் சட்டபூர்வமாக உத்தியோகத்துக்குத் தகுதியற்றவராக்க வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகள் தனிச்சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்.
By சொக்க.சிவா
9/25/2011 7:25:00 AM

idhu kandikka thakkathu
By zakkaria
9/24/2011 7:51:00 PM

திரு, சிலம்பரசன் அவர்களே மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளத்தான் , மெட்ரிக்குலேசன் சில பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளி மாணவர்கள் பேசும் ஆங்கிலம் அசிங்கமானது ஆபாசமானது, இங்கு நன்றாக கற்றுத் தரும் பள்ளியின் ஆங்கிலத்தை . பரிட்டனைச் சேர்ந்தவன் அதை ஆங்கிலமாகவே எடுத்துக்கொள்ள மாட்டான், ஆங்கிலம் படிக்கட்டும் அதற்கான எதை விற்று வேண்டுமென்றாலும் படிக்க வைப்போம் எனறால் என்ன அர்த்தம், கோவிலின் புதையலை விட அதிகப் புதையல் அமுதத் தமிழினில் உண்டு , சிறு வயதினில் இருந்தே குழந்தைகளை தமிழையும் . தமிழ் நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாதபடி ஆங்கிலத்தைத் திணிக்காதீர்கள், மா, சம்பத்குமரன்
By மா, சம்பத்குமரன்
9/24/2011 8:53:00 AM

இறந்தது இந்து மாணவிதானே மாற்றுமத மாணவியாக இருந்திருந்தால் தமிழகமே கொதித்தெளிந்திருகும்! இந்துவாக பிறந்ததால் கேட்பதற்கு அரசும் தயாரில்லை,கேடுகட்ட இந்து மக்களும் தயாரில்லை !!!!
By s .பிரபாகரன்,ராமேஸ்வரம்
9/23/2011 10:00:00 PM

மணி உன் கருத்து எல்லாம் லூசுதனமா இருக்கு திருந்து
By rajaram
9/23/2011 1:40:00 PM

தம் மதத்தை பரப்புவதற்கும் மற்ற மதங்களை புண் படுத்துவதற்கும் மட்டுமே பள்ளிகளை நடத்தும் கிறித்துவர்கள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். இந்து பெண்கள் அனைவரும் போட்டும் பூவும் வைக்கிறார்கள் அவர்கள் எல்லாரும் சில்க் ஸ்மிதா போல் வேஷம் கட்டுகின்றனரா ?
By ராஜாராம் M
9/23/2011 1:35:00 PM

பொட்டு வைப்பது நமது கலாச்சாரம். ஏன் கிறிஸ்தவர்கள் கூட பொட்டு வைகிரர்களே!. இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? ஏசு மற்றவர்கள் மனது புண் படும்படி நடந்து கொள்ள சொல்லி இருகிறார? அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று தான், தவ்வுசெய்து பைப்லை படியுங்கள்.
By sirajudeen
9/23/2011 10:35:00 AM

பொட்டு வைப்பது நமது கலாச்சாரம். ஏன் கிறிஸ்தவர்கள் கூட பொட்டு வைகிரர்களே!. இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? ஏசு மற்றவர்கள் மனது புண் படும்படி நடந்து கொள்ள சொல்லி இருகிறார? அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று தான், தவ்வுசெய்து பைப்லை படியுங்கள்.
By sirajudeen
9/23/2011 10:35:00 AM

ஆனால் ஆசிரியைகள் வெள்ளை உடை சிலுவை அணிந்துகொண்டு வருவது நியாயமா நம் நாட்டில் இந்துக்களை தவிர எல்லோரும் எது வேண்டுமானாலும் செயாலாம். ஏனென்றால் வாக்கு வேண்டுமே
By salam
9/23/2011 9:42:00 AM

புகக் தட் பிட்ச்
By rtram
9/23/2011 7:02:00 AM

தேவை நரேந்திர மோடி தமிழ் நாட்டுக்கு
By parivel
9/23/2011 12:15:00 AM

இந்த வாசகர் கருத்து பகுதியில் நண்பர் மணி குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானது எந்த இந்து பள்ளியில் பூ வைக்ககூடாது சொல்கிறார்கள்.போட்டும் பூவும் வைக்க கூடாது கிறஸ்தவ பள்ளிகள் சொல்வது மத உணர்வில்தான்.இவர்கள் வகுப்பு ஆரம்பிக்கும் போது பிரேயர் என்ற பெயரில் மதத்தைதான் பரப்புகிறார்கள்.
By Y.மணிகண்டன்.
9/22/2011 10:21:00 PM

அவளுக்கும் பூவும் போட்டும் வைக்கவேண்டும்
By மோகன்ராஜ் ஜெபமணி
9/22/2011 8:45:00 PM

ஏண்டா பேமானிகளே!இதுக்கெல்லாமா “மதச்சாயம்”பூசுவீர்கள்?
By நாஞ்சிலான்
9/22/2011 5:52:00 PM

students eppdi vanthal enna teachers vela padam solli koduppathu mattum than…. ippo enna achu antha student uyir thirumba vanthuduma……. antha teachera pudichu jail la pottu jenmathukkum kali mattum thinga kodunga sir………
By selva
9/22/2011 5:32:00 PM

கிருத்துவ பள்ளிகள் அனைத்துமே கல்வி என்ற போர்வையில் மதத்தை போதிப்பதும் நம்மை துச்சமாக மதிப்பதும் சகஜமாகி போயிற்று … சட்டம் தான் இவர்களை திருத்த வேண்டும்..
By sami
9/22/2011 12:48:00 PM

let that fanatic be hanged
By mjj
9/21/2011 7:35:00 PM

அந்த பள்ளியின் செயல்கள் கண்டனத்துக்கு உரியவை… இறந்த மாணவி பூவும் போட்டும் வைத்து சென்றது ஒரு பிழையா? தமிழர்கள் வரலாறு முழுவதும் பூவும் பொட்டும் இருக்கிறது… அந்த பிள்ளையை சில்க் ஸ்மிதா என்று திட்டிய அந்த மத வெறி பிடித்த ஆசிரியை தண்டிக்க வேண்டும்.. அவர் கருத்துப் படி பூவும் பொட்டும் அணிந்தவர்கள் அனைவரும் கவர்ச்சி நடிகையா ? பூவும் பொட்டும் கிறித்துவ பண்பாட்டில் இல்லை என்றால் கிறுத்துவர்கள் பின்பற்ற வேண்டாம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டிற்குள் வந்து பண்பாட்டை மாற்ற முயலாதீர்.
By bala
9/21/2011 7:20:00 PM

இந்த செய்தியை படித்து நிறைய கிருஸ்தவ பள்ளிகள் திருந்தட்டும் முதலில் பள்ளி நிர்வாகம் இந்திய பண்பாடை கற்று கொண்டு பள்ளிகளை நடத்துங்கள்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்த அராஜகம் நடக்கிறது இதில் அரசு தலை இட்டால் நல்லது.
By Manikandan
9/21/2011 9:11:00 AM

இச்செய்தி முதல்வரின் கவனத்திற்கு செல்லவேண்டும் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க படவேண்டும்
By ப்ரத்யூஷ்
9/20/2011 10:33:00 PM

எசுவே வந்து சொன்னாலும் இங்கே இருக்கும் மத வெறியர்கள் திருந்தமாட்டார்கள்.
By மோகன்ராஜ் ஜெபமணி
9/20/2011 9:20:00 PM

அந்த டீச்சரை செருப்பில் அடித்து மொட்டை அடிக்க வேண்டும் . நாயே உயிர் போச்சே…
By senthil
9/20/2011 7:55:00 PM

Hang that teacher close the school my heart is broken Dismiss that teacher and send her to prison alagarsamy
By Alagarsamy
9/20/2011 6:05:00 PM

அனால் என்னக செய்றது நமது வீடுப்பில்லைங்க நல்ல இங்கிலிபீஸ் பேசணும்னு கொண்டு பொய் அந்த கான்வென்ட்ல தானே செற்குறோம் ?
By Silambarasan
9/20/2011 5:42:00 PM

குல்லா அணிந்து இஸ்லாமியர்களும், சிலுவை அணிந்து கிறிஸ்துவர்களும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், ஒரு மாணவி “பூ போட்டு அணிந்து”, பள்ளிக்கு செல்ல கூடாதா? இது அராஜகம். 1) அந்த ஆசிரியை மீது கிரிமினல் குற்றத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2) பள்ளி நிர்வாகம், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 3) பள்ளி இழுத்து மூடப்பட வேண்டும்.
By Shankar
9/20/2011 1:28:00 PM

இவர்களுக்கு பணம் வரும் வழியை அடைத்து விட்டால் திமிர் அடங்கிவிடும் .போலி சேவை வேடமும் கலைந்துவிடும்.
By rajendran
9/20/2011 10:56:00 AM

அந்த பள்ளி ஆசிரியை உடனே கைது செய்யப்பட்டு தூக்கில் போட வேண்டும். இது இந்து மதத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.
By மாதவன்
9/20/2011 9:24:00 AM

கிறிஸ்துவ பள்ளிகளில் இன்று பாடத்தை விட மத பிரச்சாரமே நடைபெறுகிறது. மாணவர்களை அவர்கள் விருப்பத்துக்கு நாகரிகமான உடையணிந்து வர உரிமையுண்டு; மத உணர்வுகை கருத்தில் கொண்டு பள்ளிகள் அதை தட்டி பறிப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும்.
By velumani
9/19/2011 9:31:00 PM

Every school has its own ethics. Parents are well aware of the ethics and dress code of the schools before admitting their children. Whereas, in an isolated case when a children became adament and wanted to violate the school’s eithics, the school management is not to be blamed but the parents who failed to counsel the girl or transfer her to another school. As schools are spread in every nook and corner nowadays, the parents don’t have to admit their childeren if their code is not acceeptable to them. So it is better to avoid extraneous discussions in this matter. However the teacher’s response is against our law and it requires action too.
By Tamilian
9/19/2011 8:58:00 PM

Govt should take action against the teacher.
By Vadivel
9/19/2011 8:10:00 PM

ஒரு தமிழ் பெண் தற்கொலை செய்து கொண்டார்!!! இதற்கு காரணம் ஒரு “கிறுக்கன்” பள்ளியில் நடந்த அட்டுழியம்!!!! இதற்கு தமிழ் ஆர்வலர்கள் என்ன செய்யப்போகிறார்கள். அமைதியாக இருந்து அவர்களின் ஓட்டுக்களை பெற முண்டி அடிப்பார்கள். என்னே இவர்களின் மனிதாபிமானம்!!!!! ஒ!! தமிழா!! தமிழர்களுக்காக உயிரை விட உள்ளதாக கூறும் இவர்களை நன்றாக அடையாளம் கண்டுகொள்!!! ராஜீவை கொலைசெய்தவர்களுக்கு தண்டனையை ரத்துசெய்யக்கூரும் “தமிழ்” உணர்வாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்!! நின்று கவனிப்போம்!!! வெள்ளைக்காரனை விரட்டியடித்தோம்!!! ஆனால் இன்னும் அவனது சிஷ்யர்கள் இங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!!! இவர்களை எப்போது விரட்டுவது!!
By M.Natrayan
9/19/2011 7:43:00 PM

எதற்கெல்லாமோ உண்ணாவிரதம் இருக்கிறார்களே! இதற்கு உண்ணாவிரதம் அந்த பள்ளியின் முன் இருக்கட்டுமே! எங்கே போயிற்று மனித உரிமை கழகம்? சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் உரிமை பறிக்கப்படுகிறது. இதுதான் secular இந்தியா!! – மோகன்.
By மோகன்.
9/19/2011 7:24:00 PM

தலைப்பு தவறு. மாணவியின் உயிரை பறித்தது பொட்டும் பூவும் அல்ல. அன்னிய மதத்திடம் அடிமை பட்ட நம்மவரின் மதவெறிதான் அம்மாணவியின் உயிரை பறித்தது. எனவே தலைப்பு ‘மதமாற்ற வெறி மாணவி உயிரை பறித்தது’ என்றே இருக்கவேண்டும். அந்த பெண் தர்மத்தை காக்க உயிர் துறந்திருக்கிறாள். அவள் தியாகியாக மதிக்கப்பட வேண்டும்.
By அரவிந்தன்நீலகண்டன்
9/19/2011 6:51:00 PM

Kindly forward this mail to every one in your group and spread the awareness. Let this reach the hands of the media. Programmes like “Neeya Naana” , “Nadandadhu Enna” should discuss this and propogate. When Bharath is giving all sorts of freedom to these minorities (which can not even be imagined in muslim / christian countries) how their consciousness allow them to treat our Hindu children like this? We the majority should start sending our children to schools where our culture is being nurtured. In every place, where the schools ban flowers and tilak, all the hindu parents should jointly protest to the management. Do the Hindu Managements school compel the non-hindu students to keep tilak, will they tollerate this?
By ramagururajan
9/19/2011 6:49:00 PM

நீர் அடியில் வாயு பிரயோகம் செய்தால் பெரிது படுத்தும் நம் ஊடகங்கள் இதை ஏன் கண்டுகொள்ளவில்லை? நம் நாட்டில் சிறு பான்மையினர் செய்யும் தவறுகள் மூடி மறைக்கப்படும். பெரும்பான்மையினர் செய்யாத தவறுகள் பெரிது படுத்தப்படும். பகுத்தறிவு பேசும் (அ)நியாயவாதிகளின் பேச்சுக்கள் ஊடங்களை ஆக்கிரமிக்கும்.இப்போது எங்கே அவர்களின் குரல்?
By Tamilian
9/19/2011 6:21:00 PM

இதுவே ஹிந்து பள்ளியில் ஒரு கிறிஸ்தவனுக்கு நடந்திருந்தால் போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் மீடியாக்களும் தேசிய பரிசினை ஆக்கியிருப்பார்கள். உடனடி தேவை இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு வெளியிலிருந்து வரக்கூடிய பண உதவியை கண்காணிப்பதோடு அரசே ஏற்று நடத்த வேண்டும்.
By த Rajesh
9/19/2011 6:16:00 PM

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை போடுவதை தடை செய்தபோது இங்குள்ள இஸ்லாமியர்கள் என்னமாய் கூச்சல் போட்டார்கள்? இப்போது மலர் வைத்து கொள்வதையும் போட்டு வைத்து கொள்வதையும் குறம் சொல்கின்றன. இதன் காரணமே நாம் அந்த பள்ளிகளை உயர்வை நினைப்பதே. நீதி மன்றத்துக்கு இழுத்தால் சரியாகிவிடும்.
By kala
9/19/2011 5:46:00 PM

having studied in a christian school, i know of thes behaviour. they will force everyone to study bible. they use minority status to eascape…shame. AND IT IS A SERIOUS PROBLEM THAT GOVT set long term policy.
By KiRu.Kan
9/19/2011 5:34:00 PM

இந்துகள் நடத்தும் சில பள்ளிகளிலும் பூ வைக்ககூடாது என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது . யூனிபர்ம் அணிவது ஏன்? அது போல்தான் இதுவும். எதற்கு மத சாயம் ?
By Mani
9/19/2011 5:07:00 PM

இந்துகள் நடத்தும் சில பள்ளிகளிலும் பூ வைக்ககூடாது என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது . யூனிபர்ம் அணிவது ஏன்? அது போல்தான் இதுவும். எதற்கு மத சாயம் ?
By Mani
9/19/2011 5:02:00 PM

இதுவே இந்து அல்லாத ஒருவரை பொட்டோ பூவோ திருநீறோ வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால் போராட்டம் நடத்த நிறையப் பேர் கிளம்பியிருப்பார்கள். இந்து மதம் மட்டும் எக்கேடு கேட்டாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
By இனியன்
9/19/2011 4:46:00 PM

கண்டிபதற்கு ஒரு ஆசிரியைக்கு முழு உரிமை உண்டு , இதில் தவறு நடை பெற்றால் நிர்வாகத்திடம் நேரில் முறைடுவதுதனே ! இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொண்டால் மாணவர்களே இல்லாமல் போய்விடுவார்கள் !!
By Mani
9/19/2011 4:41:00 PM

மொட்டசிஹளை தூக்கில் தொங்கவிடுங்கள்
By முரளி.V
9/19/2011 4:36:00 PM

“இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..” என்றார் வருத்தத்துடன். “- வேறு பள்ளியில் சேர்த்திருக்கலாமே ! பல முறை கண்டித்தும் பலனில்லை . சோக முடிவு !!
By Mani
9/19/2011 4:26:00 PM

எல்லா கிறித்துவ பள்ளிகளுமே இப்படித்தான்.சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி சுற்றுலா என்ற போர்வையில் மாணவர்களை கோவைக்கு அழைத்து வந்து அவர்கள் மத பிரசார பிரசாரத்துக்கு பயன் படுத்தியதை பத்திரிக்கைகள் அம்பல படுத்தின.அந்த பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
By கே சுகவனம்
9/19/2011 4:20:00 PM

கிறிஸ்தவர்களில் பூ, பொட்டு வைக்கும் பல பெண்களை நான் பார்த்துள்ளேன்! ஏன், தங்கள் வாரிசுகளுக்கு ஹிந்து நண்பர்களைப் போல ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கமும் உண்டு அவர்களிடத்தில்!!!! தோஷ நிவ்ருத்தி பூஜை போன்ற ஹிந்துக்களின் வழக்கத்தையும் பலர் கடைப் பிடித்து வருகின்றனர்!
By அப்துல் ரவுப்
9/19/2011 3:45:00 PM

கிறிஸ்தவர பள்ளிகளா கிறுக்கர் பள்ளிகளா
By gb
9/19/2011 3:35:00 PM

கிறிஸ்தவம் தடை செய்யப்படவேண்டிய ஒன்று. அல்லது மத கலவரம் வெடிக்கும். இதே நிலைமை ஒரு மிநோரிட்டி வந்து இருந்தால் எல்லா கட்சியும் என்ன சொல்லி இருக்கும் என்று சொல்லி ப்ரோவிக்கவேண்டிது இல்லை. உடனடி தேவை ஜெயா, தங்கள் நடவடிக்கை
By parivel
9/19/2011 3:22:00 PM

பொதுவாக கிறிஸ்தவ கல்விநிறுவனங்களில் பூ வைப்பதும் போட்டுவைப்பதும் தடை செய்யப்படுகின்றன.இது அரசியல் சாசன அத்துமீறல் intha schoolai udane mooda vendum
By Sekar.T
9/19/2011 3:17:00 PM

பெரும்பாலான கிருத்துவ பள்ளிகள் இதைதான் செய்கின்றன. இதை எந்த கவர்மெண்டும் கேட்பதில்லை . இதே ஒரு இந்து ஸ்கூலில் நடந்திருத்தால் உடனே பொறம்போக்கு திக கட்சிகள் உடனே போராட்டம் நடத்த வீதிக்கு வந்துவிடும.
By தனம்
9/19/2011 3:15:00 PM

ஒரு மாணவரை கண்டிப்பதாக இருந்தால் அவரை தனியே அழைத்து கண்டிக்க வேண்டும். இதை ஏன் பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிப்பதில்லை.கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் அவமானம் என்று கருத தக்க வகையில் பள்ளி நிர்வாகங்கள் எதையும செய்யகூடாது; பொதுவாக சிறுவர்கள் உடல் ரீதியான தண்டனைகளை கூட ஏற்பர். ஆனால் மன ரீதியான் காயங்களை ஏற்பதில்லை.
By balakrishnan
9/19/2011 2:24:00 PM

கிற்துவபள்ளிகள் இந்த விசயத்தில் கரறகவாய் தான் நடக்கிறார்கள் இந்து குழன்திகளின் உரிமையை பறிக்க இவர்ககுளுக் யார் அதிகாரம் கொடுத்தது முஸ்லிம் பெண்ணை பர்தா போடகுடதுன்னு சொல்லுமா அந்த பள்ளி நிர்வாகம் i
By sukumar.v
9/19/2011 1:58:00 PM

இதனால் தான் ஹிந்து ச்ரிச்தியன் கலவரம் தோன்றுகிறது எனவே இந்த பள்ளியை அரசாங்கமே எடுத்துகொண்டு அண்ட் ஆசிரியை தூக்கிலிடவேண்டும்
By CHANDRASEKAR
9/19/2011 1:52:00 PM

மத ரீதியில் மாணவர்களை மனம் புண் படுத்தி கொல்லும் நிலைமாற அரசு என்ன செய்யபோகிறது ?எல்லோரும் அவரவர் முறைகளை பின்பற்ற அனுமதிக்காவிடில் அங்கிகாரம் ரத்து செய்யவேண்டும்.உடனடி விசாரணை தேவை.
By r .sundararaman
9/19/2011 1:51:00 PM

மன்னவர்களை அடிக்க கூடாது என்ற அரசின் சட்டம் இருக்கும் இந்நாளில் அடித்த அந்த ஆசிரியை தண்டிக்கபடவண்டிவரே
By Nour
9/19/2011 1:48:00 PM

கிறிஸ்தவ பள்ளிகளில் இது போன்ற அட்டோழியங்கள் மிக அதிகம் கிறிஸ்தவம் தடை செய்யப்படாவிட்டால் நாடு பேராபத்தை எதிர்கொள்ள வேண்டியிர்க்கும்
By தமிழ்
9/19/2011 1:40:00 PM

இவனுங்களுக்கு இதே பொழப்பாப் போச்சு . நான் ஸ்கூல் படிக்கும் போது இதே மாதிரி தான் நெற்றியில் இருந்த விபூதியை அழிக்க சொன்னான் ஒரு ஆசிரியன் .. வாழ்க பாரதம் வளர்க மதசார்பின்மை
By நல்லூரான்
9/19/2011 1:26:00 PM

பொதுவாக கிறிஸ்தவ கல்விநிறுவனங்களில் பூ வைப்பதும் போட்டுவைப்பதும் தடை செய்யப்படுகின்றன. இதுவே அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு . இது அரசியல் சாசன அத்துமீறல். தனிமனிதரின் சமய சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தும் அவர்கள் குழந்தைகளுக்கு பூவைக்கவும் பொட்டுவைக்கவும் அனுமதி மறுக்கும் கிறித்தவ கல்விநிலையங்களை அவர்கள் புறக்கநிக்காததுதான் இந்த அட்டுழியம் தொடர்வதற்கு காரணம். சமய உரிமை யை மறுத்ததற்காக அந்த கல்வி நிறுவனத்தின் மீதும் ஆசிரியர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்கொலையை துண்டுதல் குற்றம் எனவே அதற்கும் தகுந்த தண்டனை வேண்டும் சிவஸ்ரீ. விபூதிபூஷண்
By சிவஸ்ரீ. விபூதிபூஷண்
9/19/2011 1:17:00 PM

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s