திருச்சி மேற்கு தொகுதி தேர்தலுக்காக வாகன சோதனை……ரூ.10 கோடி நகை-பணம் பறிமுதல்

திருச்சியில் வாகன சோதனையின் போது பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி நகை-பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பறக்கும் படையினர் சோதனை

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், அனுமதியின்றி பணம் எடுத்து செல்வதை கண்காணிக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் திருச்சி மாநகர பகுதியில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் துணை தாசில்தார் ரெங்கராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் திருச்சி கருமண்டபம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

நகை-பணம் சிக்கியது

அப்போது அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து வந்த காரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில் 3-க்கும் மேற்பட்ட பைகளில் கட்டுக்கட்டாக பணமும், பெட்டி, பெட்டியாக நகைகளும் இருந்தன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரமேஷ், ரவிச்சந்திரன் என்பதும் தெரிந்தது.

ரூ.10 கோடி நகை-பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கத்தை, கத்தையாகவும், நகைகள் பாக்ஸ்களில் அதிக அளவு அடைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அவற்றின் மதிப்பு தெரியவில்லை. இதையடுத்து பறக்கும்படையினரை சேர்ந்த அதிகாரிகள் பறிமுதலான நகை மற்றும் பணத்தை மதிப்பீடு செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விடிய, விடிய எண்ணினர். இதில் நேற்று அதிகாலையில் தான் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரியவந்தது.

அதில் 34 கிலோ தங்க நகையும், ரூ.40 லட்சத்து 52 ஆயிரத்து 980 ரொக்கபணமும் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதனை கொண்டு வந்த ரமேஷ், ரவிச்சந்திரன் ஆகியோரிடம் இவ்வளவு நகை-பணம் எதற்காக, எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தேனியில் இருந்து திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள பிரபல நகைகடைக்கு நகைகள் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும், பணம் நகைகள் விற்றதன் மூலம் வந்ததாகவும் தெரிவித்தனர்.

அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

இடைத்தேர்தல் நடைபெறுகிற நிலையில் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக பணத்தை எடுத்து சென்றால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், மேலும் இவ்வளவு நகை மற்றும் பணத்திற்கான ஆவணங்கள் உள்ளதா? என தேர்தல் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு உரிய ஆவணங்களை எடுத்து காட்டவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரான பிரசன்னா என்பவரையும் நள்ளிரவில் வரவழைத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தனது கடைக்கு விற்பனைக்காக நகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட 34 கிலோ தங்க நகை மற்றும் ரூ.401/2 லட்சம் பணத்தை திருச்சி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை

அதனை தொடர்ந்து பறிமுதலான பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(dt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s