காதல் மனைவி கழுத்து நெரித்து கொலை……

தக்கலை அருகே காதல் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தக்கலை அருகே பள்ளியாடி, சாந்தன்விளையை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ்(55). மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மகள் வின்சி(22) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திங்கள்சந்தை, பெரியபள்ளியை சேர்ந்த சுந்தர்ராஜ்(29) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். சுந்தர்ராஜ் மரவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிருத்திகா என்ற மகளும், அஸ்வின் என்ற ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு வின்சென்ட்ராஜ் மற்றும் குடும்பத்தினர் வின்சியுடன் உள்ள தொடர்பை துண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வின்சென்ட்ராஜ் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த வின்சி துக்கம் விசாரிக்க பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது கணவர் தன்னை திருமணத்திற்கு பிறகு கொடுமைப்படுத்துவது குறித்து தாயார் மேரிசிசிலியிடம் வின்சி கூறியுள்ளார். பின்னர் தாயாருடன் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கருங்கலில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். சுந்தர்ராஜ் வாரத்திற்கு ஒருமுறை சாந்தன்விளை வந்து வின்சி மற்றும் பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது கணவன், மனைவியிடம் நகை கேட்டு தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி கணவன், மனைவி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்ட போது மகள் கிருத்திகாவை சுந்தர்ராஜ் தன்னுடன் தூக்கி சென்றுள்ளார். கடந்த 22ம் தேதி வின்சி கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை, தந்தை மறைவுக்கு பின் தாயார் நடத்தும் மளிகை கடை சென்று குழந்தை அஸ்வினை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வின்சி கல்லூரிக்கு செல்லும் போது வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தையை இவரது தாயார் மளிகை கடைக்கு தன்னுடன் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜ், மனைவியிடம் மீண்டும் நகை கேட்டு தகராறு செய்துள்ளார். நகை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜ், வின்சியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அப்போது வின்சி மயக்கமடைந்துள்ளார். உடனடியாக சுந்தர்ராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இரவு 8.30 மணியளவில் கடையை அடைத்து விட்டு மேரிசிலிலி வீட்டிற்கு வந்த போது வின்சி சுயநினைவு இழந்து காணப்பட்டார். குழந்தை அஸ்வின் தாயாரின் அருகில் அழுது கொண்டிருந்தது. உடனடியாக மேரிசிசிலி, வின்சியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு இவரை பரிசோதித்த டாக்டர்கள் வின்சி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து மேரிசிசிலி தக்கலை போலீசில் புகார் கூறினார். சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வந்து வின்சியின் சடலத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வின்சி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. போலீசார் தப்பியோடிய சுந்தர்ராஜை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s