கள்ளக்காதலன் கொலை….கணவனுக்கு 10 ஆண்டு சிறை…….

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியை சேர்ந்த பாக்குமரம் ஏறும் தொழிலாளி ராஜேந்திரன்(49). பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(41). இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால், அடிக்கடி ராஜேந்திரன் வீட்டுக்கு செல்வம் வந்து செல்வார்.அப்போது, ராஜேந்திரன் மனைவியுடன் செல்வத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ராஜேந்திரனுக்கு தெரியாமல் அடிக்கடி செல்வம், அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.தனது மனைவியுடன் செல்வம் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அறிந்த ராஜேந்திரன், அவரை கண்டித்துள்ளார். ஆனால், செல்வம், ராஜேந்திரன் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாமல் இருந்து வந்துள்ளார்.

கடந்த, 2011ம் ஆண்டு ஜன., 2ம் தேதி ராஜேந்திரன் வீட்டுக்கு செல்வம் சென்றுள்ளார். கள்ளத்தொடர்பு சம்பந்தமாக ராஜேந்திரனுக்கும், செல்வத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கத்தியால் செல்வத்தை குத்தியுள்ளார். இதில், செல்வம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வாழப்பாடி போலீஸார், ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் முதலாவது விரைவு நீதிமன்றத்தில், ராஜேந்திரன் மீதான கொலை வழக்கு விசாரணை நடந்தது. இந்த கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

(dm)

…………………………

prosper – paris,பிரான்ஸ்
2011-09-26 00:42:55 IST Report Abuse
இந்த நாதாரிகாக இந்த மனுசன் சே……கஷ்டமா இருக்கு

* Rate it:
*
* 8
*
* 0

Share this comment
Reply
Cancel
gummanguthu gopi – abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
2011-09-24 12:58:30 IST Report Abuse
கள்ளக் காதல் செய்தவனை வேறு என்ன செய்ய வேண்டும் என்று இந்த சட்டம் எதிர்பார்கிறது? ராஜேந்திரன் மனைவிக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கவலை இல்லை. பத்து ஆண்டுகள் கழித்து ராஜேந்திரன் தன் மனைவிய கொன்று விட்டு மீண்டும் சிறை செல்வார்

* Rate it:
*
* 22
*
* 0

Share this comment
Reply
Cancel
Raj Raja – ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-09-24 08:06:31 IST Report Abuse
கிரகமுடா;;;தப்பு பண்ணியவ வீட்டில் ஹையா சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள்;;;;தண்டனை கொடுத்தவன் ஜெயிலில் களி தின்னு அனுபவிக்கிறான்;;;;நாட்டில் இந்த கள்ளத்தால் செய்யும் பெண் மணிகளை சட்ட படி தண்டிக்கணும்;;;அப்பத்தான் இந்த கள்ள காதல் குறையும்
……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s