site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

குஜராத் சிறந்த உதாரணம்…. அமெரிக்கா புகழாரம்!

Posted by sambala87(சூரியன்) on September 15, 2011

திறமையான நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் சிறந்த உதாரணமாக திகழ்வதாக அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை (Congressional Research Service – CRS) சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

தேசிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய மாநிலமாக மோடி தலைமையில் குஜராத் மாநிலம் திகழ்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மோடியை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பீகார் மாநிலமும் திறமையான ஆளுமை மற்றும் நிர்வாக ஆற்றலுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

அநேகமாக இந்தியாவில் சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக குஜராத் மாநிலம்தான் காணப்படுகிறது. முதலமைச்சர் நரேந்திர மோடி பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி, அரசு அலுவலகங்களில் காணப்படும் சிகப்பு நாடா முறையை ஒழித்து, ஊழலையும் குறைத்து, நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய ஓட்டுனராக குஜராத் மாநிலத்தை ஆக்கியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

(wb)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: