சில வழக்குகளில் மரணத் தண்டனை சரிதான்……

கவுரவக் கொலை போன்ற சில வழக்குகளில் மரணத் தண்டனை விதிப்பது சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மும்பையை சேர்ந்த அஜித் சிங் குஜ்ரால் என்பவர்,தமது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் சண்டை நடந்தபோது ஆத்திரத்தில் தமது மனைவி மற்றும் 3 குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் காவல்துறையிடம் பிடிபட்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இத்தண்டனையை எதிர்த்து அஜித்சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் சி.கே. பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு, அஜித்சிங்கிறகு கீழ் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பு சரியானதே என்று கூறினர்.

மேலும் கவுரவக் கொலை,வரதட்சணை கொலை மற்றும் போலி என்கவுண்டர் மற்றும் கூலிக்கு கொலை செய்தல் போன்ற சில வழக்குகளில் மரணத் தண்டனை விதிப்பது சரியானதே என்றும் அவர்கள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

அரிதிலும் அரிதான பிரிவில் வரும் மிகவும் வெறுக்கத்தக்க குற்றங்களை செய்தவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க நீதிமன்றம் தவறினால், பின்னர் மரணத்தண்டனையையே நீக்கும்படியான நிலை நீதித் துறைக்கு ஏற்பட்டுவிடும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

அஜித்சிங்கை போன்ற தமது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய ஒருவரே தமது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொன்றிருக்கும்போது அவரைப் போன்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அல்லது அவர்களை சீரமைக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டனர்.

(wb)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s