மனைவியின் செக்ஸ் உணர்வைப் பூர்த்தி செய்யாத கணவருக்கு அபராதம்….

பிரான்ஸைச் சேர்ந்த 51 வயது ஆண் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு 8500 பவுண்ட் அபாராதத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது பிரெஞ்சு நீதிமன்றம். திருமணம் செய்து அவருடன் 21 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, மனைவியின் செக்ஸ் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவருடைய செக்ஸ் உணர்வுகளை பூர்த்தி செய்யாமல் விவகாரத்து செய்ததற்குத்தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜீன் லூயிஸ் என்ற பெயருடைய நபர்தான் அபாராதத் தொகை கட்டியவர். பிரெஞ்சு நாட்டு சட்டம் 215- ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தாம்பத்யம் என்பது திருமண உறவில் ஒரு அங்கம். ஆனால் படுக்கையறையில் தனக்கு அதைக் கொடுக்காமல், தனது 21 வருட வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டதற்காக தனது கணவனிடம் இருந்து 8500 பவுண்ட் அபராதம் பெற்றுள்ளார் அந்த முன்னாள் மனைவி.

ஆனால் இந்த விநோத வழக்கு குறித்து நீதிபதிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த பிரெஞ்சு நீதிபதி, தாம்பத்யம் என்பது திருமணமான தம்பதிகளுக்கிடையே அந்நியோன்யமானது. குடும்ப வாழ்க்கையில் செக்ஸும் ஒரு அங்கம்தான். செக்ஸ் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இல்லை. செக்ஸ் உறவு என்பது நாம் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. இல்வாழ்க்கையில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் தங்களின் காதலை பகிர்ந்து கொள்வது இயற்கை. ஆனால் இந்த வழக்கில் அது இல்லை என்று கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு செய்திருந்தார் அந்த பெண். தனது 21 வருட கால குடும்ப வாழ்ககையில் தனக்கு போதிய அளவில் செக்ஸை தனது கணவர் தரவில்லை. இதற்காக அவரிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து விவகாரத்து வழங்கிய நீதிபதி மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பொறுப்பேற்று அபாராதம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஜீன் கூறுகையில், எனது உடல் சோர்வும், உடல் நலப் பிரச்சினைகளும்தான் என்னால் போதிய அளவில் செக்ஸில் ஈடுபட முடியாமல் போனதற்குக் காரணம் என்றார்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s