site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 283,666 hits
 • Advertisements

117 ஆண்டுக்கு பின் நில கையகப்படுத்தும் சட்ட திருத்தம்……

Posted by sambala87(சூரியன்) on September 6, 2011

நாட்டில் எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தும் நில கையகப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு மக்களை குளிர்விக்கும் வகையில் கவர்ச்சி சலுகைகளை அளிக்க ஆளும் காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருக்கிறது. நில மதிப்பில் பல மடங்குகள் தொகையை உயர்த்தி கொடுக்கவும் , கையகப்படுத்தும் நிலம் எதனை பொறுத்து அமைகிறதோ அதற்கு ஏற்ப சலுகைகளும், உள்ளிட்ட பல்வேறு சாராம்சங்கள் கொண்ட நில கையகப்படுத்துதல்-சீர்திருத்தம் மற்றும் நிவாரணம் அடங்கிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி விட்டது. இம்மசோதா பார்லி.,யில் நாளை ( செவ்வாய்கிழமை) தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 117 ஆண்டுகள் மாற்றம் இல்லாமல் பழமையான சட்டம் இப்போது புது ஒளி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக நிலம் கையகப்படுத்தும் போது எதிர்ப்புகள் கிளம்புவதும் , பின்னர் விவசாயிகள் தற்கொலை செய்வதும், மேலும் எதிர் போராட்ட வன்முறைகளினால் விவசாயிகள் உயிர் இழப்பதுமான பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக உத்திரபிரேதசம் , மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய போராட்டம் எடுத்துக்காட்டாக உள்ளன. இதனால் மக்களை கவரும் விதத்தில் நில கையகப்படுத்தும் மசோதா உருவாக்க காங்கிரஸ் அரசு முனைந்திருக்கிறது.

ராகுல் கருத்துக்களுக்கு முன்னுரிமை: இதன் முன்னோட்டமாக காங்.,பொதுசெயலர் ராகுல் உத்திரபிரதேச விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். இவர் அளித்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க மசோதா என்கிறார் ஜெய்ராம்ரமேஷ்: தற்போது உருவாக்கப்பட்டுள்ள மசோதா குறித்து கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் கூறுகையில்; நில கையகப்படுத்தும் மசோதா 2011 , வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்த மசோதா கம்பெனி நிர்வாகிகளுக்கும், நில உரிமைதாரர்களுக்கும், வாழ்வாதாரமாக நம்பி இருப்போருக்கும் பெரிய இடையூறு தராத வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; 100 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பரிந்துரைகள் மற்றும் மக்கள் கருத்துக்கள் கொண்ட சட்டம் இது. குறிப்பாக கூட்டணியில் அமைந்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்திய அனைத்து அம்சங்களும் இந்த மசோதாவில் இடம் பிடித்திருக்கிறது. இன்று அல்லது நாளை மசோதா தாக்கலுக்குபின்னர் பார்லி., நிலைக்குழுவிற்கு அனுப்பி வைத்து மேலும் அனைத்து அரசியல் கட்சியினர் வழங்கும் ஆலோசனைகளும் வரவேற்கப்படும். இவ்வாறு ஜெயராம்ரமேஷ் தெரிவித்தார்.

அமைச்சரவை ஒப்புதல்: இந்த மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று இரவு ( திங்கட்கிழமை ) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. 90 நிமிட கூட்டத்திற்கு பின்னர் அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா கொண்டு வருவதன் மூலம் நாட்டில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் நல்ல வளர்ச்சி காண முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

01. ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது குறைந்தது 80 சதவீதம் அந்த மக்களின் ஒப்புதல்களுடன் மட்டுமே செய்யப்படும். அரசு சார்பில் நடக்கவிருக்கும் ஒரு சில பொது காரியங்களில் இது விதி விலக்காக அமையும்.

02. நிலம் கையகப்படுத்தும்போது கிராமப்புறம் ( மார்க்கெட் விலையை விட கூடுதலாக 2 மடங்கு ) , நகர்ப்புறம் ( மார்க்கெட் விலையை விட கூடுதலாக 2 மடங்கு ) நிவாரண தொகை வழங்கப்படும்.

03. மாநில அரசுகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றி கொள்ளலாம்.

04. கையகப்படுத்துதல், நிவாரணம் வழங்குதல், மறு குடியமர்த்தல் உள்ளிட்டவைகளில் காலதாமதம் இல்லாது விரைந்து முடிக்க காலக்கெடு நிர்ணயம்.

05. நிலம் வழங்குவோருக்கு மாதம்தோறும் , ஆண்டுதோறும், என நிர்ணயிக்கப்பட்ட உதவி தொகை வழங்கும் திட்டம்.

06. விளைச்சல் நிலங்கள் கையகப்படுத்துதலில் மேற்குவங்கம், பஞ்சாப், கேரளம், அரியானா போன்ற மாநிலங்களுக்கு முக்கிய சட்ட வரைமுறைகள்.

07. கிராமசபைகளுக்கு கூடுதல் அதிகாரம்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: