வெங்கையா நாயுடுவின் லேப்டாப்பை போட்டு உடைத்த எதியூரப்பா- அமைச்சருக்கும் பளார்

முதல்வர் பதவியை இழந்துள்ள எதியூரப்பா, பாஜக செய்தித் தொடர்பாளர் வெங்கையா நாயுடுவின் லேப்டாப்பை தூக்கிப் போட்டு உடைத்துள்ளார். மேலும் தனது அமைச்சர் ஒருவரையும் பளார் என கன்னத்தில் அறைந்து தனது கோபத்தை வெளிப்படுத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கையா நாயுடு பாஜக தேசியத் தலைவராக இருந்தவர். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். அவருக்கு நேர்ந்த இந்த கதி பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைக் கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து விலகச் செய்ததாலும், தனது கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக மேலிடம் தயங்கியதாலும் கடும் கோபத்தில் இருந்த எதியூரப்பா இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

டெல்லியில் வைத்துதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பாக டெல்லி வந்திருந்தார் எதியூரப்பா. அங்குள்ள லலித் அசோக் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது நாயுடுவும், மற்ற பாஜக தலைவர்களும் அங்கு வந்து எதியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது தனது பக்க விளக்கத்தை அளித்தார் எதியூரப்பா. ஒரு கட்டத்தில் அவர் கடும் கோபமடைந்தார். அப்போது வெங்கையா நாயுடுவிடமிருந்த லேப்டாப்பை வேகமாகப் பிடுங்கி அவர் தூக்கிப் போட்டார். இதில் லேப்டாப் உடைந்து சிதறியது. இதைப் பார்த்து பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்கையா முகத்தில் ஈயாடவில்லை.

இதேபோல பதவியிலிருந்து விலகுமாறு நெருக்கடி அதிகரித்த நிலையில் அவரது வீட்டில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கூடியிருந்தனர். அப்போது ஒரு அமைச்சர் அவரை சமாதானப்படுத்தி வாருங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு வரலாம் என்று கூறி இருக்கையிலிருந்து எழுப்ப முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த எதியூரப்பா அந்த அமைச்சரை கன்னத்தில் பலமாக அறைந்து விட்டாராம்.

எதியூரப்பாவின் இந்த அதிரடி செயல்களால் பாஜக வட்டாரம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாம்.

முன்பு இதேபோன்ற ஒரு அவமானத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கும் சந்திக்க நேர்ந்தது இங்கு நினைவு கூறத்தக்கதாகும். உ.பியில் காங்கிரஸ் கட்சியின் இரு கோஷ்டியினருக்கிடையே சோன்பத்ரா மாவட்டத்தி்ல மோதல் மூண்டது. அந்தப் பிரச்சினையை சமாளிக்க திக்விஜய் சிங் அனுப்பி வைக்கப்பட்டார்.

இரு கோஷ்டித் தலைவர்களையும் சந்தித்துப் பேசி சமரசப்படுத்த முயன்றார் திக்விஜய் சிங். அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கோபத்தில் முட்டைகளை எடுத்து திக்விஜய் சிங் முகத்தில் வீசி அடித்து முட்டை அபிஷேகம் செய்து திக்விஜய் சிங்கை அதிர வைத்தனர்.

திக்விஜய் சிங்காவது முட்டை அபிஷேகத்துடன் தப்பினார். ஆனால் எதியூரப்பாவிடம் சிக்கி வெங்கையா நாயுடு தனது லேப்டாப்பை இழந்து விட்டார். ஒரு அமைச்சருக்கு கன்னம் பழுத்தது மிச்சமாகியுள்ளது.

நாளை முதல்வர் தேர்வு-மோதலுக்கு எதியூரப்பா கோஷ்டி ஆயத்தம்

இதற்கிடையே, புதிய முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் கூட்டம் நாளை பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தனது ஆதரவைப் பெற்ற சதானந்த கெளடாவையே முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று கோரி இறுதிக் கட்ட பலப்பரீட்சையை நடத்த எதியூரப்பா தயாராகி விட்டார்.

தற்போது முதல்வர் பதவிக்கான போட்டி சதானந்தா கெளடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் இடையேதான் கடுமையாக உள்ளது. ஷெட்டர் வரக் கூடாது என்பதில் எதியூரப்பா படு தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.

நாளை ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி முன்னிலையில் நடைபெறவுள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படப் போவது கெளடாவா அல்லது ஷெட்டரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒரு வேளை கெளடாவையே தேர்வு செய்ய வேண்டும் என்று எதியூரப்பா தரப்பு கடுமையாக நெருக்கினால், அவரை முதல்வராக்கி விட்டு, ஷெட்டரை சமாதானப்படுத்தும் வகையில் அவரை துணை முதல்வராக்குவது என்ற முடிவுக்கு பாஜக வரலாம் என்று தெரிகிறது.

எதியூரப்பா அளவுக்கு ஷெட்டரும் பலம் வாய்ந்தவராகவும், அவருக்கும் கணிசமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாலும் பாஜக மேலிடம் பெரும் தவிப்பில் உள்ளது.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s