site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 283,666 hits
 • Advertisements

பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்……………

Posted by sambala87(சூரியன்) on July 16, 2011

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். “என்னடா கனகவேல் எப்படியிருக்க…’ எனக் கேட்ட காமராஜர். “நல்லா இருக்கேன் தாத்தா… எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு… நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்’ என்றார் அந்த இளைஞர்.அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர். அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, “மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை’ என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.

“என் பேரை எதுக்கு எழுதினே…’ காமராஜரின் குரலில் கோபம் இருந்தது. “இல்லை தாத்தா… மெட்ராஸ் முகவரி கேட்டாங்க… எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்’ என்றார் அந்த இளைஞர்.உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து, ” கனகவேலு… இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு… அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே.

“இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது’ என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர், காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.இதெல்லாம் அந்த காலம்…!

(dm)
………..

vettu_onnu_thundu_rendu – Madras ,குக் இஸ்.
2011-04-06 00:04:48 IST Report Abuse
அவர் உட்கார்ந்த நாற்காலியில், இவர் எப்படியப்பா உட்கார்ந்திருக்கார்? இன்னும் உட்கார ஆசை படுகிறார்? கருமம்டா சாமி!!!

Amanullah – Riyadh,சவுதி அரேபியா
2011-04-05 20:48:42 IST Report Abuse
அவர் வாழ்ந்த காலத்தில் நான் சிறுவன்.. அவரைப்பற்றி இப்போது படிக்கும்போது என் கண்கள் தானாகப் பணிக்கின்றன..அவர் பிறர்க்காக (நட்டு மக்களுக்காக) வாழ்ந்த மகான்..

Nallavan Nallavan – Jubail ,சவுதி அரேபியா
2011-04-05 16:16:43 IST Report Abuse
இப்போதுள்ளவர்களை ஒப்பிட்டால் வேதனை தான் மிஞ்சுகிறது!

kumaran rs – Bangalore,இந்தியா
2011-04-05 13:55:26 IST Report Abuse
காமராஜர், பெரியார், அண்ணா மற்றும் எம் ஜி ஆர் போன்றோர் உயரோடு இல்லாததுனால, இங்க ஒரு கிழம் என்னா ஆட்டம் போடுது!!!! எதுவானாலும் தன் குடும்பம் மட்டும் தான் நல்ல இருக்கனும்ன்னு இந்த வயதிலையும் துடியா துடிக்கிராறு.

Pandiyan Subramaniyan – newyork,யூ.எஸ்.ஏ
2011-04-05 12:49:57 IST Report Abuse
மனித தெய்வம் அய்யா காமராஜர் ! செய்திக்கு நன்றி

AVAR ARASIYALILL VANDHA THU NATTU MAKKAL KKU NANMAI SEAYA,IPPO IRUKARAVAGHA THAN MAKKALUKKU NALLA THU SEAYA ,ITHU MGR PADINAR ” makkal nalam makkal nalam entra solluvar ,than makkal nalam ontrea than manathill kolluvar ”

வாசகர்களை கடுப்பெத்தவே தினமலர் இந்த செய்தியை போட்டுள்ளது. காமராஜர் என்றால் அவர் சிலைக்கு மாலை போடுவது அவர் பெயரை வைத்து பொழப்பு(அதான் கட்சி) நடத்துவது என்று காங்கிரஸ்காரர்கள் மாறி ஒரு தலைமுறையே போயாச்சு..இப்போ போய் இதெல்லாம் போட்டுக்கிட்டு.. ஆனாலும் ரொம்ப குசும்பு உங்களுக்கு..

அட தலைப்பை படித்தவுடன் நான் ஒரு கணம் நம் தானை தலைவர்தானோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன்..நிருபரே இந்த பிழைக்க தெரியாத மனிதரைதான் நம் தானைத்தலைவர் அவர் சார்ந்த சமூகத்திற்கு ஆதரவாக செயபடுகிறார் என்று சாடினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: