site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஸ்டாண்டர்டு சாட்டர்டு அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

Posted by sambala87(சூரியன்) on July 13, 2011

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தித்தார் என்று ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி அதிகாரிகளிடம் மத்திய புலனாய்வுத் துறையினர் இன்று விளக்கம் கேட்டனர்.

ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் ஸ்டாண்டர்டு சாட்டர்டுதான் வங்கியாளராக செயல்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது நடைபெற்ற நிதிப்பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை வங்கியின் ஆவணங்களில் இருந்து பெற முடியும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவசங்கரனின் புகாரையடுத்து சிபிஐ அதுதொடர்பாக ஆரம்பகட்ட புகாரை பதிவுசெய்துள்ளது. அந்த புகார் தொடர்பாக ஆய்வுசெய்து வரும் சிபிஐ அதன் ஒருபகுதியாக ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி அதிகாரிகளிடம் இருந்து விவரங்களைக் கேட்டு விசாரணை நடத்தியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: