site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரிலையன்சுக்கு ரூ.650 கோடி அபராதத்தை ரூ.5 கோடியாக குறைத்தேனா?……கபில் சிபல் மறுப்பு….

Posted by sambala87(சூரியன்) on July 9, 2011

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக நான் விதிமீறலில் ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி கபில் சிபல் கூறியுள்ளார்.

பொதுநல வழக்கு

சுப்ரீம் கோர்ட்டில், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில் சிபலுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. `பொதுநல வழக்கு மையம்’ என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ரிலையன்ஸ் நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தை மீறியதற்காக, அதற்கு ரூ.650 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் கூறிய நிலையில், அந்த அபராத தொகையை கபில் சிபல் ரூ.5 கோடியாக குறைத்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, கபில் சிபல் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுப்பு

இந்த வழக்கு தொடர்பாக, கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், தீய நோக்கமும், அவதூறு பரப்பும் நோக்கமும் கொண்டவை. அந்த மனு ஏன் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புபடுத்தி தாக்கல் செய்யப்பட்டது? எனக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை. பொதுநல மனுக்கள், பொது நலனுக்காக பயன்படாமல், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.

நோட்டீஸ்

கிராமப்புற பகுதிகளில் டெலிபோன் சேவை நடத்துவதற்காக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்ïனிகேஷன்ஸ் நிறுவனம், மத்திய அரசு அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அதை மீறி, கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில், கிராமப்புற சேவையை நிறுத்தி விட்டது.

அதையடுத்து, ரூ.50 கோடி அபராதம் விதிக்க நேரிடும் என்று ரிலையன்சுக்கு தொலைத்தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி, ரிலையன்ஸ் மீண்டும் கிராமப்புற சேவையை தொடங்கியது.

பிப்ரவரி 18-ந் தேதி, அதுதொடர்பான கோப்பு என்னிடம் வந்தது. நான் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைப்படி, அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டேன்.

விதிமீறல் இல்லை

அதன்படி, சேவை நிறுத்தப்பட்டிருந்த 45 நாட்களுக்கான அபராதமாக ரூ.5 கோடி விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை நான் நிர்ணயிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைப்படி, அதிகாரிகள் நிர்ணயித்தனர்.

எனவே, நான் தொலைத்தொடர்பு விதிமுறைகளை மீறவில்லை. தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், எந்த மந்திரியும் முடிவுகளே எடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் அரசாங்கமே செயல்பட முடியாது.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

(dt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: