site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

தயாநிதி ராஜினாமா:ராசா மகிழ்ச்சி…………….

Posted by sambala87(சூரியன்) on July 8, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையடுத்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்த செய்தி பரவியதும் பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உள்பட அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
.
இதே போல சென்னையில் கலைஞர் டிவியிலும், திமுக தலைமை அலுவலகத்திலும் மாறன் ராஜினாமா குறித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதன் முதலாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்கள் தங்களது நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.

ராசா, கனிமொழி ஆகியோர் கைதான விவகாரத்தில் திமுகவில் உள்ள தயாநிதி மாறன் சகோதரர்களை குற்றம் சாட்டி வந்தனர். கட்சியில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு திமுக தலைவர் கருணா நிதியும் மாறனுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த கட்சியின் தலைவர்களும் தயாநிதி மாறனுடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் கருணாநிதி குடும்பத்தில் அவரது மகள் செல்வி, மகன் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மட்டும் மாறன் சகோதரர்களிடம் எப்போதும் போல் உறவு வைத்துள்ளனர்.

அண்மையில்திமுக தலைவர் கருணாநிதி கனிமொழியை சந்திக்க திகார் சிறைக்கு சென்றபோது தயாநிதி மாறனும் உடன் சென்றிருக்கிறார். கனிமொழியை சந்தித்த பின்னர் ராசாவையும் கருணாநிதி சந்தித்தார். அந்த சமயத்தில் தயாநிதி மாறனை பார்த்த ராசா அங்கிருந்தவர்களிடம் இவர் எப்போது உள்ளே வரப் போகிறார்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2ஜி வழக்கில் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டியதையடுத்து அவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த செய்தி வெளியான போது பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஆ.ராசா, அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் ராசா வழங்கிய லட்டை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அறிவாலய வளாகத்தில் நேற்று மாலையில் திரண்டிருந்த திமுகவினரும் மாறன் கைது செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். கலைஞர் டிவியிலும் ஊழியர்கள் இதனை வரவேற்று மகிழ்ந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(ms)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: