site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

‘வனம்’ என்றால் என்ன? மத்திய அரசிடம் பதில் இல்லை

Posted by sambala87(சூரியன்) on June 29, 2011

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் “வனம் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தே என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மாநில வாரியாக வனப்பகுதியின் பரப்பளவு மற்றும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை ஆகிய தகவல்களை கேட்டிருந்தார்.

அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில், “வனம் என்பதற்கான விளக்கம் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஜய் மராத்தே கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டர் பரப்பளவு வனப்பகுதி கூடியிருப்பதாக மத்திய அரசின் அறி்க்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பது, மரங்களை வெட்டுவது, பெரும்பாலான மாநிலங்களில் வனப்பகுதி வெகுவாக குறைந்துள்ளது ஆகிய சூழ்நிலையில், அரசின் அறி்க்கை எப்படி தயாரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. வனப்பகுதியின் அளவை பெரிதாக்குவதை விட அதன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான், வனம் என்பதற்கு என்ன? அதன் தரத்தை எப்படி அளவிடுவது? என கேட்டு மனு அனுப்பியிருந்தேன்.” என்றார்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: