தடம் மாறும் தமிழ் சினிமா! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

முன்பெல்லாம், ஒரு நடிகர் நடிக்கும் படத்தில், இன்னொரு நடிகரும் நடிக்க வேண்டி இருந்தால் அல்லது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்று இயக்குநர் கதை ‌சொன்னால் முதலில் ஹீரோக்கள் மனசுக்குள் கேட்பது, நமக்கு பாட்டு இருக்குமா, டூயட் வருமா, பைட் இருக்குமா, எத்தனை சீன் நமக்கு வரும். அவருக்கு எத்தனை சீன், வெயிட் ரோல் யாருக்கு இப்படி மண்டை குடைய கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாலிவுட்டில் சத்தம் இல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஹிருத்திக், அபிஷேக் நடித்த “தூம்-2”, அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்த “3-இடியட்ஸ்”, சல்மான் கான், சஞ்சய் தத் நடித்த “சாஜன்” என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது இந்த பாணி தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது.

சமீபத்தில் வெளிவந்த, வெளிவர இருக்கும் படங்களில் இதை காணலாம். ஆர்யா நடித்த “பாஸ் என்ற பாஸ்கரன்” படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்தார். “கோ” படத்தில் ஜீவாவுடன் அஜ்மலும், ஒரு பாட்டில் கார்த்தி, ஜெயம் ரவி, தமன்னா, அதர்வா என்று பெரிய நட்சத்திரங்களும் பங்கேற்றன. தற்போது வெளிவந்த “வானம்” திரைப்படத்தில் சிம்புவும், பரத்தும், “அவன் இவன்” படத்தில் ஆர்யா-விஷால் சேர்ந்து நடித்திருந்தனர். இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும் “வந்தான் வென்றான்” படத்தில் ஜீவாவுடன், நந்தா முக்கிய ‌ரோலில் நடித்திருக்கிறார். ஷங்கரின் “நண்பன்” (3-இடியட்ஸ் ரீ-மேக்) படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். சிம்பு நடிக்கும் “ஒஸ்தி” படத்தில் சிம்புவின் பிரதர் ரோலில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். அதேபோல் லிங்குசாமியின் “வேட்டை” படத்தில் ஆர்யாவுடன் மாதவனும், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் சுப்ரமணியபுரம் ஜெய், விமல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படியாக தமிழ் சினிமா ஒரு ஆ‌ராக்கியமான பாதையை நோக்கி, நடிகர்களுக்குள் ஒரு நட்புறவை வளர்க்கும் விதமாக செல்கிறது. இனி புதிய களங்களோடும், புதிய கதைகளோடும் இன்னும் வளரும் தமிழ் சினிமா!

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s