சொத்துக்கணக்கை வெளியிட்டார் யோகா குரு பாபா ராம்தேவ்

யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று தனது சொத்து கணக்கை வெளியிட்டார். ஹரித்துவார் ஆசிரமத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அவர் தனது சொத்து மதிப்பை அறிவித்தார். இதன்படி ராம்தேவ் தலைவராக உள்ள பதஞ்சலி யோகபீட சொத்து மதிப்புகள் அதன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள நிலத்தின் மதிப்பு 1 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரத்து 740 ரூபாய். ரூ. 113 கோடியே, 77 லட்சத்து 91 ஆயிரத்து 879 மதிப்புள்ள கட்டடங்களும், தளவாட பொருட்கள் மதிப்பாக 6 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 565 ரூபாயும், பர்னிச்சர் பொருட்கள் மதிப்பாக 6 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரத்து 450 ரூபாயும் உள்ளன. மற்ற சொத்துக்கள், கம்ப்யூட்டர், வாகனங்கள் மற்றும் கால்நடைகள் என மொத்தம் ரூ. 143 கோடியே, 31 லட்சத்து 21 ஆயிரத்து 165 மதிப்புள்ள நிலையான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி இன்றுடன் 6 நாள ஆகிறது , ஆகாராம் எதுவும் எடுத்துக்கொள்ளளாததால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வந்தாலும் அவரது உடல் பல்ஸ் மிக குறைவாக இருந்து வருகிறது. இதற்கிடையில் அவரது போராட்டத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில் மாவட்ட நீதிபதி ஆசிரமத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்.இவருடன் போலீஸ் உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

பாபாவை சந்தித்த மாவட்ட மாஜிஸ்திரேட் மீனாட்சிசுந்தரம், அவரது உடல் நிலை குறித்து கவலை தெரிவித்தார். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு பாபா ஒத்துக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் லெமன் ஜூஸ் , தேன் மற்றும் நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ள மாஜிஸ்திரட் ‌கூறியதை பாபா ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக கறுப்பு பணவிவகாரத்தை முன்வைத்து உண்ணாவிரதம் துவக்கி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இவரது போராட்டம் வலுப்பெறும் பட்சத்தில் மத்திய அரசுக்கு அவப்பெயர் பெருகக்கூடும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது, இதனையடுத்து டில்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து இவரும் இவரது ஆதரவாளர்களும் போலீசார் படை துணையுடன் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனாலும் அவர் ஹரித்துவாரில் உள்ள ஆசிரமத்தில் தற்போது உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறார்.

அமலாக்க துறையினர் லென்ஸ் பார்வை: மத்திய அரசுக்கு இடையூறு செய்யும் இவருக்கு சிக்கல் கொடுக்க வருமான வரி மற்றும் அமலாக்க துறையினருக்கு கிரீன்சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் யோகாகுரு சொத்து மற்றும் கம்பெனிகளின் வரவு, செலவு, லாபம், வரி உள்ளிட்ட விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடத்தின் சொத்து விவரத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று காங்., செயலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

சொத்து ஒரு பார்வை: பதஞ்சலி யோகபீடத்தின் கீழ் ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஆயுர்வேத சிகி்ச்சை மையங்கள் உள்ளன. இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் பலர் நன்கொடை கொடுத்ததன் மூலம் சொத்துக்கள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளளார். முக்கியமானது என கருதப்படுபவை எதுவெனில் ., பதஞ்சலி ஆயுர்வேதா, திவ்யா யோகா டிரஸ்ட், வேதிக்பிராட்காஸ்ட் லிமிடெட்., ஆஸ்தா டிவி சானல் அடங்கும்.

ஆயுர்வேதாவின் தரமான புராடெக்ட்: பதஞ்சலி ஆயுர்வேதா 2008- 2009 ல் வருமான வரித்துறையினரிடம் தாக்கல் செய்யப்பட்ட விவரத்தில் ரூ60 கோடி என மொத்த வரவு செலவு காட்டப்பட்டுள்ளது. இதில் 4. 5 கோடி லாபம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது. உடல் நலம் காக்கும் பொருட்கள் தயாரித்து விற்று வரும் பதஞ்சலி ஆயுர்வேதாவில் முக்கியத்துவம் வாய்ந்தது அம்லா, மற்றும் ஆலோவேரா ஜூஸ் ( பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட ஜூஸ்), இந்த இரண்டு பொருட்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ( 2008 – 2009 ன்படி) 25 கோடிக்கு விற்றுள்ளது.இன்னும் மூலிகை பொருட்கள் தயாரித்தல், தைலம் , அழகு சாதன பொருட்களுக்கும் ரொம்ப மவுசு. ,இந்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ரீட்டைல் வியாபாரிகள் மூலம் 95 லட்சம் டிப்பாசிட் தொகை கிடைத்துள்ளன.

இதில் ஸ்காட்லாந்தை சேர்ந்த என்.ஆர்.ஐ., தம்பதிகள் (சர்வான்சாம்- சுனிதா ) பெரும் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் யோகா பீடத்திற்கு ஸ்காட்லாந்தில் ஒரு தீவை ( 900 ஏக்கர் ) அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்த தீவில் யோகா மையம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

(dm)
……………………….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s