உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் ஹசாரே: வலுக்கிறது மக்கள் ஆதரவு

ஊழலுக்கு எதிராகவும், யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் துவக்கி உண்ணாவிரத போராட்டத்தை மாலை 6 மணியளவில் நிறைவு செய்தார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது..

ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் கதர் ஆடை அணிந்தும், காந்தியின் தொப்பி அணிந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ராஜ்காட்டின் மையப் பகுதியில் மகாத்மா காந்தி போன்று வேடமணிந்த ஒருவர் காந்தியின் பாடல்களை பாடி பஜனை நடத்தினார். மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.

ஹசாரே பேட்டி : ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே கூறியதாவது : ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியது; நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது; இதனை நியாயப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யக்கூடாது; லோக்பால் வரைவுக்குழுவில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு கிடையாது; ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெறும்;நாட்டின் நலனுக்காக எனது உயிரை தியாகம் செய்ய எனது 18 வது வயதிலேயே உறுதி பூண்டுள்ளேன்;ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிடில் அதற்கு அடுத்த நாளில் இருந்து நான் மீண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆதரவு : தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஹசாரேவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், ராம்தேவ் ஆதரவாளர்களும், பா.ஜ., வினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும், சமூக நல அமைப்புக்களும், ஊழல் எதிர்ப்பு அமைப்புக்களும் ஆதரவு அளித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s