site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஜாதிக்கட்சிகள் இனி கேள்விக்குறி! ……………

Posted by sambala87(சூரியன்) on June 7, 2011

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா, ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று கவிஞர்கள் சொன்னதெல்லாம், ஜாதிகள் இல்லாத ஒரு சமத்துவ சமுதாயம் வேண்டும் என்பதற்காகத் தான்.ஈ.வெ.ரா., எத்தனையோ ஜாதி ஒழிப்பு மாநாடுகள் நடத்தினார். ஆனால், அதனால் பலன் ஒன்றும் இல்லை.இன்று எங்கு பார்த்தாலும் ஜாதி, ஜாதி என்று தான் அலைகின்றனர். போதாக்குறைக்கு, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.அரசியலில், ஜாதி அடிப்படையில் நின்று ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், “பா.ம.க.,வும் வி.சி.,யும் இணைந்தால், ஆட்சியைப் பிடித்து விடலாம்’ என அடிக்கடி கூறி வந்தார்; புள்ளி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனோ, அதை கண்டுகொள்ளவே இல்லை.ஜாதி என்பது வேறு, அரசியல் என்பது வேறு. “ஐந்து வயதில் அண்ணன், தம்பி; பத்து வயதில் பங்காளி’ என்று ஒரு பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை. ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பியே ஒத்து இருப்பதில்லை. ராமன் ஒரு கட்சி என்றால், லட்சுமணன் ஒரு கட்சி. ஏன், தந்தையும், மகனுமே ஒத்துப்போவதில்லை.கடந்த சட்டசபைத் தேர்தலில், 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று இடங்களில் தான் வென்றது. 10 இடங்களில் போட்டியிட்ட வி.சி., ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. புதிதாக தோன்றிய, கொங்கு வேளாளர் சங்கம், ஏழு இடங்களில் போட்டியிட்டது. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நினைத்தால், கடைசியில் புஸ்வாணம் ஆகிவிட்டது.மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர், டாக்டர் சேது ராமனுக்கு, ஜாதியும் கைகொடுக்கவில்லை; பிற கூட்டணி ஓட்டுகளும் கிடைக்கவில்லை.ஜாதிக்கட்சிகள், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தான் வெற்றி பெற்று வந்தன. ஜாதிக் கட்சிகள் என்பது, பந்தயக் குதிரை மாதிரி தான். ஆனால், அதுவும் இனி மக்களிடம் எடுபடாது போலிருக்கிறது. ஜாதிக் கட்சிகளின் எதிர்காலம் இனி கேள்விக்குறி தான்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: