யோகா குரு ராம்தேவ் சொத்துகள்: அமலாக்கப் பிரிவு விசாரணை………..

டில்லியில் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவின் சொத்துகள் தொடர்பாக, அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியுள்ளனர். அவருக்கு எதிரான புகார்கள் குறித்தும் விசாரணை நடைபெற உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். தற்போது, ஹரித்துவாரில் அவரது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், பாபா ராம்தேவ் தொடர்பாக, நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், “பாபா ராம்தேவ் ஒரு வஞ்சகர்; அவர் நாட்டை தவறான வழியில் நடத்திச் செல்ல முற்படுகிறார். அவர் மோசடி பேர் வழியும் கூட. ராம்தேவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என, கோரினார்.

இதையடுத்து, ராம்தேவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த விசாரணையை, மத்திய அரசின் உத்தரவின் பேரில், வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் துவக்கியுள்ளனர். ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமானது என கருதப்படும் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட், திவ்யா பார்மதி யோக், ஆரோக்கியா ஹெர்ப்ஸ், ஜார்க்கண்ட் மெகா புட்பார்க், திவ்யா பாக்மாப், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் உட்பட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணக்கு விவரங்கள், வருமான வரி செலுத்திய விவரங்கள், வரிச் சலுகை பெற்ற விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யத் துவக்கியுள்ளனர்.அதே நேரத்தில், ஹரித்துவாரில் பாபா ராம்தேவின் ஆசிரமம் அமைந்துள்ள நிலம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது.

பாபா ராம்தேவ் ஆசிரமம் அமைந்துள்ள அந்த இடம், மகந்த் ராஜேந்திர தாசை தலைவராகக் கொண்ட, உதாசீன் அக்ஹடா அமைப்புக்கு சொந்தமானது. விதிமுறைகளின்படி, அந்த நிலத்தை யாரும் விற்கவோ, பதிவு செய்யவோ அல்லது யாருக்கும் பரிமாற்றம் செய்யவோ முடியாது. ராஜேந்திர தாசின் மறைவுக்குப் பின், அந்த இடம், அவரின் வாரிசான மகந்த் மகேந்திர தாசுக்கு செல்ல வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு விற்கப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தான் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பாபா ராம்தேவின் உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர். “இவர் நேபாளத்தில் குற்றம் ஒன்றை செய்து விட்டு, ஹரித்துவாருக்கு வந்து விட்டார்.

பின்னர் இந்திய குடிமகனாகி, பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவர் பாஸ்போர்ட் பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் ஏற்கனவே கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பாலகிருஷ்ணன் நேற்று ராம்தேவுடன் காணப்படவில்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்பது குறித்தும் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s