site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு ‘பல்டி’ அடித்தார் ராம்தேவ்-கபில் சிபல்

Posted by sambala87(சூரியன்) on June 5, 2011

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு ‘பல்டி’ அடித்தார் ராம்தேவ் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்பது குறித்து ராம்தேவ் அதிருப்தி தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டரீதியாக குழு அமைப்பதன் அடுத்த நடவடிக்கை சட்டம் இயற்றுவதுதான் என்று அவருக்கு விளக்கம் அளித்தேன். விரைவில் குழு அமைக்கப்படும். 6 மாதத்தில் அக்குழு அறிக்கையை அளிக்கும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.

இப்படி மத்திய அரசு உறுதிமொழி அளித்தபோதும் தனது உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று ராம்தேவ் வலியுறுத்தினார். அதையும் ஏற்க தயாராகவே இருந்தோம்.

ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை மாலை 4 மணிக்கே முடித்துக் கொள்வதாக எங்களிடம் உறுதியளித்திருந்தார். ஆனால், உறுதியளித்ததற்கு மாறாக வேண்டுமென்றே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

மேலும் டெல்லி போலீசாரிடம் ராம்லீலா மைதானத்தில் யோகாவுக்கு என்று அனுமதி வாங்கிவிட்டு தனது உண்ணாவிரதம் நடத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தார். இதிலிருந்து ஆர்எஸ்எஸ்சின் இன்னொரு முகம் தான் ராம்தேவ் என்பது உறுதியாகிவிட்டது.

இதனால் அவரை கைது செய்ததில் தவறே இல்லை என்றார்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: