ராம்தேவ் உண்ணாவிரத 10 கோரிக்கைகள்!

கறுப்புப் பணத்துக்கு எதிரான பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் துவங்கியது.

அவருடன் ஆயிரக்கணக்காணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் மத்திய அரசிடம் ராம்தேவ் 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன் விவரம்:

1. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு லட்சம் கோடி பணத்தை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீ்ட்டுக் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. அளவுக்கு அதிகமாக, முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைப்பது தேசிய குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

3. ஊழல் செய்து, ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

4. அன்னா ஹசாரே தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழு மூலம் வரையறுக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா மிகவும் வலுவான சட்டமாக இருக்க வேண்டும்.

5. ஊழல் குற்றச்சாட்டுக்களை விரைந்து விசாரிக்க எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.

6. ஊழல் செய்து சிக்கிக் கொள்ளும் வி.ஐ.பிக்கள் மீதான வழக்கு விசாரணை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

7. ஊழல் செய்வதற்கு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும் ஒரு விதத்தில் உதவியாக உள்ளன. எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களையே ரத்து செய்ய வேண்டும்.

8. பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புகளை ஒவ்வொரு வரும் தங்கள் தாய் மொழியிலேயே படிக்கும் வகையில் கல்வியில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

9. பிரதமரை மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும்.

10. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் ஆகியவையே அந்த கோரிக்கைகள்.

பிரமாண்ட ஏற்பாடுகள்:

இந்த உண்ணாவிரதத்தையொட்டி ராம்லீலா மைதானத்தில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்தான் ராம்லீலா மைதானம். ராம்லீலா நிகழச்சியும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இங்குதான் தற்போது ராம்தேவி்ன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. பந்தல் அலங்காரம் கண்களைப் பறிப்பதாக உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக பந்தலுக்கு உள்ளே கிட்டத்தட்ட 5000 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேடையில் ஏர்கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடி விடக் கூடாது என்பதற்காக போர்வெல் போட்டு 650 குழாய்களையும் நிர்மானித்துள்ளனர்.

மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருவோரின் வசதிக்காக குளியல் அறைகள், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெருமளவிலானோர் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்றே ராம்லீலா மைதானத்தில் வந்து குவிந்து விட்டனர்.

உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக டாக்டர்கள் குழுவையும் ஏற்பாடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 டாக்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

போராட்டத்தில் குழுப்பம் வந்து விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களையும் உண்ணாவிரதப் பந்தல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.

போராட்டத்தில் சமூ்க விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவித்து விடாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பாபாவின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s