site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

2ஜி முறைகேடு விவகாரத்தில் சன் டிவி : தயாநிதிமாறன் விளக்கம்

Posted by sambala87(சூரியன்) on June 2, 2011

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சிபிஐ இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது மேலும் அடுத்த வாரம் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சி. சிவசங்கரன் தனியார் தொலைபேசி நிறுவன முன்னாள் தலைவர் இந்த தொலைபேசி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க மாறன் தாமதம் செய்ததாகவும்,

பின்னர் அந்த நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் உடனடியாக உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் சிவசங்கரன் குற்றம்சாட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த போது மலேசியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மாக்சிஸ் கம்யூனிகேஷன் தனது மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளதா?

மேலும் இந்த விவகாரத்தில் சிவசங்கரனிடம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் அடிப்படையில் மாறன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தயாநிதிமாறன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், ‘’எந்தவொரு நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை. விதிகளூக்கு உட்பட்டே தொலைத்தொடர்பு நிறுவனகளுக்கு அனுமதி தரப்பட்டது.

எனது பதவிக்காலத்தில் இழப்பு ஏற்பட்டதாக தலைமைக்கணக்காயர் கூட கூறவில்லை. ஏர்-செல் நிறுவனத்துக்கும் உரிமம் வழங்கியதில் தாமதத்துக்கு நான் பொறுப்பல்ல.

எந்தவொரு நிறுவனத்தின் நிகர மதிப்பு, சட்ட விவகாரங்களை ஆய்வு செய்த பின்பே உரிமம் வழங்கப்பட்டது. சகோதரர்( சன் டிவி குழுமம் ) நிறுவனத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் எதுவும் முதலீடு செய்யவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

(nkn) :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: