site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

சட்டவிரோத சொத்துகளை மீட்க மத்திய அரசு தீவிரம்: கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும் புது திட்டம்

Posted by sambala87(சூரியன்) on May 29, 2011

கறுப்பு பணப் புழக்கம், அவற்றை வெளிநாடுகளில் பதுக்குவது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான, சட்ட விதிகளை கடுமையாக்குவது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்ட விரோத சொத்துகளை மீட்பது தொடர்பாகவும் இந்தக் குழுவினர் ஆலோசனை வழங்குவர்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் கறுப்பு பணம் அதிகம் புழங்குவதாகவும், அவை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுவதாகவும், சமீபகாலமாக அதிகமாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, கறுப்பு பண நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதற்கு எதிரான சட்ட விதிகளை, மேலும் கடுமையாக்குவது, புதிய விதிமுறைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்வது ஆகியவை குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய நேரடி வரி வாரியத்தின் (சி.பி.டி.டி.,) தலைவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமலாக்கத் துறைத் தலைவர், வருவாய் உளவுத் துறையின் இயக்குனர் ஜெனரல், சி.பி.டி.டி., யின் இணைச் செயலர், நிதி உளவுத் துறையின் இணை இயக்குனர், சி.பி.டி.டி.,யின் வருமான வரித் துறைஆணையர் உள்ளிட்டோரும் இந்தகுழுவில்இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு, பல்வேறு துறைகளிலும் ஆய்வு நடத்தி, பல்வேறு தரப்பிடமும் ஆலோசனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யும். ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையிலான புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். இந்த குழு, கறுப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பாக, தற்போதுள்ள சட்ட விதிமுறைகள் குறித்தும் பரிசீலிக்கும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை பறிமுதல் செய்வது, கறுப்பு பண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது தொடர்பாகவும், இந்த குழு ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்கும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி, “”கறுப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்க மத்திய அரசு குழு நியமித்திருப்பதன் மூலம், இந்த விவகாரத்தில் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர, மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆனால், இந்தப் பிரச்னையை வைத்து பா.ஜ., கட்சியினர் அரசியல் நடத்த நினைக்கின்றனர். கறுப்பு பணம் மீட்கப்பட வேண்டும் என்பதில், அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என, சந்தேகமாக உள்ளது,” என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: