பேரவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்: விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை

பேரவையில் பேச உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

14-வது சட்டப் பேரவையின் புதிய பேரவைத் தலைவராக டி.ஜெயகுமாரும், துணைத் தலைவராக பி.தனபாலும் ஒருமனதாக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பேசினர்.

விஜயகாந்த் (எதிர்க்கட்சித் தலைவர்): பேரவைத் தலைவரும், துணைத் தலைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், அனைவராலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என்பது தெளிவாகிறது. பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஜெயகுமார், சட்டப் படிப்பு படித்தவர். சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். விதிகளின்படி பேரவையை அவர் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சியினருக்கு உதவிகரமாக இருப்பார். ஆளும்கட்சி திறம்பட செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் கருத்துகள் தேவைப்படலாம். எனவே, பேரவையில் பேசுவதற்கு எங்களுக்கு போதிய வாய்ப்புகளை அளிக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்.

மு.க. ஸ்டாலின் (திமுக): ஆளும்கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றிய அனுபவம் புதிய பேரவைத் தலைவருக்கு உண்டு. இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவை அனைத்தையும் கூட்டிப் பார்க்கும்போது அவர் சிறந்த அனுபவம் உள்ளவர். சட்ட நுணுக்கங்களை அறிந்து வைத்துள்ளவர். ஆளும் கட்சியின் நோக்கங்களை அறிந்து, எதிர்க்கட்சிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உண்டு.

ஜனநாயகத்தை பற்றி அண்ணா குறிப்பிடும்போது, “ஐந்து விரல்களும் வெவ்வேறாக இருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்றுசேரும்போது உருப்படியான காரியம் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோன்று, பேரவையில் வெவ்வேறு கட்சிகள் இருந்தாலும் அவை அனைத்தும் நல்லதொரு காரியத்தை நிறைவேற்றவே இருக்கின்றன. ஜனநாயகம் எனும் பெரிய தேர் ஓடுவதற்கு சிறிய அளவிலான அச்சாணிதான் தேவை.

எனவே, பேரவையில் எண்ணிக்கையைப் பார்க்காமல் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஊர் கூடி தேர் இழுப்பார்கள் என்பர்.

ஜனநாயகம் எனும் தேரை இழுப்பதற்கு எங்களது ஒத்துழைப்பு இருக்கும். அவையை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்புத் தர தயார்.

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இருவரையும் திமுக சார்பில் வரவேற்று வாழ்த்துகிறேன். புதிய அரசுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.

ஏ.சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): ஆளும்கட்சியிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்து இருக்கிறார்கள். குறைகள் இருந்தால் அவற்றை எடுத்துச் சொல்லவும், நிறைகள் இருந்தால் பாராட்டவும் செய்வோம். பேரவையில் ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம். எங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். பேரவைத் தலைவருக்கு நிறைய நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் ஏற்க விரும்பாத கருத்துகளைக் கூட எடுத்துச் சொல்ல பேரவையில் வாய்ப்பு அளிப்பதே

ஜனநாயகம். நேரத்தில் கஞ்சனத்தனம் இல்லாமல் உரிய அளவுக்கு நேரம் கொடுக்க வேண்டும். இந்தப் பேரவைக்கென ஏராளமான புகழ்கள் உள்ளன. மேலும் புகழ்கள் சேர்க்க, பேரவை சுவைபட இருக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். அவர்களைத் தொடர்ந்து, ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.கோபிநாத் (காங்கிரஸ்), ஜெ.குரு (பாமக), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார், கதிரவன் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s