“2ஜி’ ஊழலுக்கு முழு பொறுப்பு காபினட்டும், ராஜாவும் தான்: போட்டு உடைத்தார் முன்னாள் செயலர்

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு மத்திய அமைச்சரவையும், அதற்கு பொறுப்பு வகித்த ராஜாவும் தான் காரணம்’ என, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா கூறினார்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளவர்களில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவும் ஒருவர். இவர் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. இதில், பெகுரா சார்பில் அவரது வக்கீல் அமன்லே ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விஷயத்தில் கொள்கை முடிவை சட்டத்திற்கு புறம்பாக மாற்றியது, அப்போது அமைச்சராக இருந்த ராஜா தான். இதற்கு காபினட் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னும் அவர், பிரதமர் மற்ற அமைச்சர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். தொ லைத்தொடர்பு கொள்கையை உருவாக்கியதில் பிரதமர் மற்றும் நிதி, சட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பு உள்ளது. இதில், அரசு அதிகாரியான எனது கட்சிக்காரர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். அரசின் கொள்கையை அமல்படுத்தியதற்கு பொறுப்பு ஏற்க முடியாது. இந்த ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு முழு பொறுப்பும் அப்போதைய அமைச்சர் ராஜா மற்றும் மத்திய அமைச்சரவையையே சேரும். ராஜா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, தவறான கொள்கையை கடைபிடித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

செயல்படுத்த திட்டம் ஏற்புடையது இல்லை என்றால், அது பிரதமர் தலைமையிலான காபினட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும். இது குறித்து முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் பொருத்தமான நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும். இதை தாண்டி செயல்படுத்தும் நிலையில் இருக்கும் அதிகாரியால் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்.இவ்வாறு அமன் லே வாதாடினார்.

பா.ஜ., சாடல்: “ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் பங்குள்ளது. ஆனால், இந்த விஷயம் குறித்து பேசும்போது, இரு கட்சிகளும் பொதுவில் கொஞ்சி குழாவிக் கொள்கின்றனர். தனிப்பட்ட முறையில் குறைகூறிக் கொள்கின்றனர்’ என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ஜகத் பிரகாஷ் கூறினார்.

டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜகத் பிரகாஷ் கூறியதாவது:டில்லி வந்த கருணாநிதியை அமைச்சர்கள் சிதம்பரமும், குலாம் நபி ஆசாத்தும் சந்தித்து, கனிமொழி கைது தொடர்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர். இதற்கு பின்னால் பார்த்தால், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் காட்டிக் கொள்கின்றனர். “2ஜி’ ஊழலுக்கு தி.மு.க., தான் முழு காரணம் என்று பழி போட, காங்கிரஸ் முயற்சிக்கிறது. உண்மையில் இந்த ஊழலுக்கு ஆரம்பம் முதல் காங்கிரசும், தி.மு.க.,வும் தான் காரணம் என, பாரதிய ஜனதா கூறி வருகிறது.இவ்வாறு ஜகத் பிரகாஷ் கூறினார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s