site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரேஷன் கடைகளில் இலவச அரிசி…………..

Posted by sambala87(சூரியன்) on May 26, 2011

வரும் ஜூன் 1ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை, சென்னை டி.டி.கே., சாலையில் உள்ள கடையில், இலவச அரிசி வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தால், அரசுக்கு உணவு மானியத் தொகை மேலும் அதிகரிக்கும்.

தற்போது தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைகள் அரிசி வாங்க தகுதியுடையவை. பச்சை நிறத்திலான இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு தான், இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான், வறுமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள், கீழே உள்ளவர்கள் என்ற வித்தியாசம் இன்றி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. பொது வினியோகத் திட்டத்தில் அரிசி வழங்குவதற்காக, குறைந்த விலையில், இந்திய உணவுக் கழகம் அனைத்து மாநிலங்களுக்கும் அரிசியை வழங்குகிறது.மத்திய அரசின் விலைப்படி, வறுமை கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு ஒரு கிலோ ரூ.8.30க்கும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.5.65க்கும், அந்தியோதயா அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் தரப்படுகிறது. இதன்படி, மத்திய அரசு மாதந்தோறும் 4 லட்சத்து 75 ஆயிரம் டன் அரிசியை, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதம் தேவைப்படும் அரிசியை, வெளிச்சந்தையில் தமிழக அரசு வாங்குகிறது.

இந்த விலைகளில் பெறும் அரிசியைத் தான், வறுமை கோடு வித்தியாசமின்றி அனைவருக்கும் ஒரே விலையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக உணவு மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, எவ்வளவு கிலோ அரிசி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடும்பத்தில் ஒரு பெரியவருக்கு மாதம் 4 கிலோவும், ஒரு குழந்தைக்கு மாதம் 2 கிலோ என்ற வீதத்தில், ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 12 கிலோவும், அதிகபட்சமாக 20 கிலோவும் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும், ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 16 கிலோவும், அதிகபட்சம் 24 கிலோவும் அரிசி வழங்கப்படுகிறது.இந்த விகிதப்படி தான், வரும் ஜூன் 1ம் தேதி முதல் இலவச அரிசி, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர, அந்தியோதயா அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு, மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18.65 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றன.

ஏற்கனவே, அரிசிக்கு மானியம், இலவச பொங்கல் பை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில், மளிகை பொருட்கள் போன்றவற்றை சலுகை விலையில் விற்கும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் போன்றவற்றுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாயை மானியமாக, உணவுத் துறைக்கு வழங்கி வருகிறது. தற்போது, ஒரு ரூபாய் அரிசியையும் இலவசமாக வழங்குவதால், இந்த மானியம் மேலும் 500 கோடி ரூபாயாக உயரும்.வரும் ஜூன் 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இலவச அரிசி வழங்கப்பட உள்ளதால், அத்திட்டத்தை 1ம் தேதியன்று, சென்னை டி.டி.கே., சாலையில் உள்ள ரேஷன் கடையில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்குவது தொடர்பாக, உணவுத் துறை அதிகாரிகளுடன், அத்துறையின் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை நடத்தினார். துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், “இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து அரிசி மற்றும் கோதுமை பெறும் போது, அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே பெற வேண்டும். உணவுக் கழகத்திடம் இருந்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அவை முழுமையாக வந்து சேருவதை கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதை கருத்தில் கொண்டு, போதுமான அளவு அரிசியை முன்பாகவே பெற்று வைத்திருக்க வேண்டும்.”காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து, இத்திட்டத்தை ஜூன் 1ம் தேதி முதல் செயல்படுத்த வேண்டும்’ என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: