site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மணல் கொள்ளையர் பட்டியல் தயாரிப்பு…………….

Posted by sambala87(சூரியன்) on May 26, 2011

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கி மணல் கடத்தல் அதிகரித்துள்ளதால், இதில் ஈடுபடுவோர் பட்டியலை உளவு பிரிவு தயாரித்து வருகிறது. இப்பிரிவு அறிக்கை அடிப்படையில் மணல் கொள்ளையர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால், கட்டுமான பணிகள் ஸ்தம்பித்து, தொழிலாளர்கள் பலர் வேலையின்றி உள்ளனர்.மணல் தட்டுப்பாடு இருந்தாலும், வணிக வளாகங்கள், பெரிய கட்டடங்கள் குறித்த தேதியில் முடிக்க வேண்டும் என்பதற்காக, மணலை கூடுதல் விலை கொடுத்து வாங்க ஒப்பந்ததாரர்கள் தயாராக உள்ளதை சிலர் பயன்படுத்தி, மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டம் வாரியாக அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதால், மணல் கொள்ளை தடையின்றி நடப்பதாக அரசுக்கு அறிக்கை சென்றுள்ளது. மாவட்டம் வாரியாக மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் குறித்து, மாநில உளவு பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்து, ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் யார், எங்கிருந்து எந்த வாகனத்தில் மணலை அள்ளுகின்றனர், இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுமா, கடத்தல் மணலுக்கு என்ன விலை நிர்ணயம் செய்கின்றனர். கனிமவளம், வருவாய் துறை, லோக்கல் போலீசார் இதில் யார் ஆதரவுடன் கடத்தப்படுகிறது, தொடர் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எத்தனை வாகனங்கள் உள்ளன போன்ற தகவல்களை சேகரித்து வருகின்றனர்.உளவு பிரிவு அறிக்கை அடிப்படையில் மணல் கொள்ளையர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: