கம்ப்யூட்டர் கேம் விளையாடும் மாணவர்களுக்கு உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விளையாட்டால் மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கும் என மன நல டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு வருவதற்கு முன் கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து வீதிகளில் ஓடி பிடித்து விளையாடுவது மற்றும் கோடை கால பயிற்சி முகாம்களில் சேர்ந்து பயிற்சிபெறுவது வழக்கம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு கோடை விடுமுறையை மாணவர்கள் தங்களது வீட்டில் உள்ள டிவியின் முன் அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று கேம் விளையாடுவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இத்தகைய மாணவர்களுக்காக தமிழகத்தின் நகர் பகுதிகளில் புற்றீசல் போல ஆங்காங்கே கம்ப்யூட்டர் சென்டர்கள் உருவாகியுள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் பிளே ஸ்டேஷன் மற்றும் கேம்ஸ் சிடிக்கள் மூலமும் ஏராளமான விளையாட்டுகளை பதிவு செய்து வைத்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடுவதை தவிர்த்து சக நண்பர்களுடன் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று பிடித்தமான கேம்களை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டிற்கு கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் மணிக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். இந்த தொகையை மாணவர்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ வாங்கி வந்து கம்ப்யூட்டர் கேம்களை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டு பேர் பயங்கரமாக மோதிக் கொள்ளக்கூடிய ஸ்நாக் டவுன், குத்துச்சண்டை, தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிசூடு நடத்துதல் போன்ற கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்து விளையாடுகின்றனர். இதுதவிர சீசனிற்கு தகுந்தாற்போல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போட்டி, கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுக்களை சில மாணவர்கள் விளையாடுகின்றனர். கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து விளையாட கம்ப்யூட்டர் சென்டரில் வசதி செய்துள்ளனர். இந்த கேம்களை மாணவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர். அதுபோல் மாணவிகளில் ஒரு தரப்பினர் கம்ப்யூட்டர் கேம்களை வீட்டில் உள்ள டிவியிலோ அல்து சக தோழிகளுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விளையாடி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் சென்டர்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கம்ப்யூட்டர் கேம்களை பல மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதால் மாணவர்களிடையே உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இது குறித்து நெல்லை சிநேகா மன நல மருத்துவ மைய டாக்டர் பன்னீர் செல்வன் கூறியதாவது; இன்றைய மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கேம் என்பது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மாணவர்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை விளையாடலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கோடை வெயிலில் அலைவதை தவிர்த்து நண்பர்களுடன் வீட்டில் உள்ள டிவியிலோ அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகின்றனர். இதனால் நாளடைவில் மாணவர்களிடையே கவனக்குறைவு, மறதி, படிப்பில் ஆர்வமின்மை, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. ஸ்நாக் டவுன் போன்ற மோதல் காட்சிகள் தொடர்பான விளையாட்டுக்களை விளையாடும் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் காரணமாக சிறிய விஷயங்களுக்காக கூட பெற்றோர் மற்றும் சகோதர்களிடம் அடிக்கடி சண்டை போடும் பழக்கம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் கேம் விளையாடும் மாணவர்களுக்கு நாளடைவில் கண்ணில் அழுத்தம், வலி ஏற்படுவதோடு, கம்ப்யூட்டர் கேமிற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகும். எனவே பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கம்ப்யூட்டர் கேம்கள் விளையாடுவதை அனுமதிக்க கூடாது. இதற்கு மாறாக உடலுக்கு வலிமையும், சுறுசுறுப்பையும் அளிக்கும் வகையில் சக நண்பர்களுடன் ஓடி விளையாடுதல், நீச்சல் பயிற்சி போன்ற விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கலாம். இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றி, தோல்வியில் இருந்து பாடம் கற்பிப்பதோடு, உடல் மற்றும் மனநலம் வலிமை பெற்று திகழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு மன நல டாக்டர் பன்னீர்செல்வன் தெரிவித்தார்

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s