site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஸ்பெக்ட்ரம் விவகார விசாரணை : ஜே.பி.சி., நடவடிக்கை……………

Posted by sambala87(சூரியன்) on May 18, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து, தொலைத்தொடர்பு துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அடுத்த சில நாட்களில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை (ஜே.பி.சி) நடத்தும் என, தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக, பி.சி.சாக்கோ தலைமையில், 30 உறுப்பினர்கள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின், இரண்டாவது கூட்டம், அடுத்த சில நாட்களில் நடக்கவுள்ளது. அப்போது, மத்திய தொலைத்தொடர்பு துறை செயலர் சந்திரசேகர், மத்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) தலைவர் சர்மா மற்றும் மத்திய அமலாக்க இயக்குனரக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம், விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த 1998ல் இருந்து, தொலைத்தொடர்பு துறை கொள்கை எந்த அடிப்படையில் பின்பற்றப்பட்டது, முறைகேடுகள் நடந்தனவா, உரிமங்கள் வழங்கப்பட பின்பற்றபட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்து, விசாரணை நடக்கும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களுக்கும், சம்மன் அனுப்பி, அவர்களிடமும் விசாரணை நடத்தவும், கூட்டுக்குழு திட்டமிட்டுள்ளது. திகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவிடமும் விசாரணை நடத்த வாய்ப்புகள் உள்ளன. தனது பணிகளை, வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை அறிய, தொழில்நுட்ப குழு ஒன்றை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: