2ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா? உச்ச நீதிமன்றம்………………

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதன் மூலம் பெற்ற பணத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தாதது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வரி ஏய்ப்பு விவகாரம் 2008-ஆம் ஆண்டே தெரியவந்தும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர்தான் வருமான வரித்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது. இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் விவேக் தங்கா, இந்த தாமத்தை நியாயப்படுத்தி வாதாடினார். மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் விசாரணையில் தடைகளை ஏற்படுத்தின என்று கூறினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களின் நகல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

எனினும் நீதிபதிகள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினர். வருமான வரித்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது முழுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

÷இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய முன்றும் தங்களுக்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மோரீஷஸ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி ஒரு நிறுவனம் அந்த நாட்டில் வரி செலுத்தி விட்டால், நமது நாட்டில் வரி செலுத்த வேண்டியதில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட 2ஜி ஒதுக்கீடு பெற்ற பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மோரீஷஸ் மூலமாக வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளை விற்று வரிவிலக்கு பெற்றுள்ளன.

(di)

Advertisements

One thought on “2ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா? உச்ச நீதிமன்றம்………………”

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    Share

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s