site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அப்செட்டில் அப்டேட்டை நிறுத்திய கலைஞர் டிவி-மானாட மயிலாட ‘ஸ்டார்ட்’……………..

Posted by sambala87(சூரியன்) on May 13, 2011

அதிமுக அணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறத் தொடங்கியதைத் தொடர்ந்து திமுகவின் கலைஞர் டிவி தனது தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்டை நிறுத்தி விட்டது. அதற்குப் பதில் தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை போட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியை இழக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிப்ப்பதால் அக்கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் பரவியுள்ளது. இது திமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான கலைஞர் டிவியிலும் இன்று எதிரொலித்தது.

தேர்தல் முடிவு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த கலைஞர் டிவி ஆரம்பத்தில் உற்சாகமாக அதை ஒளிபரப்பியது. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்து லீடிங் கிடைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் அப்டேட்டில் தொய்வு ஏற்பட்டது. அதிமுக அணி 100 இடங்களைத் தாண்டியதும் அப்டேட்டை சுத்தமாக நிறுத்தி விட்டது.

தற்போது ஜோடிகள் நடனமாடும் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்பி வருகிறது.

(tt)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: