site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஜெயலலிதா முதல்வராகிறார்!………………

Posted by sambala87(சூரியன்) on May 13, 2011

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களுக்கும் அதிகமாகப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.

இதன்மூலம் 3வது முறையாக ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார்.

டிஜிபி லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வருகின்றன.

அப்போது 15ம் தேதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என்று தெரிகிறது. மே 16ம் தேதி தாற்காலிக சபாநாயகர் தேர்வும், அன்றைய தினமே எம்எல்ஏக்கள் பதவியேற்பும் நடக்கும் என்று தெரிகிறது.

(nkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: