site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம்

Posted by sambala87(சூரியன்) on May 13, 2011

அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெறுவதைத் தொடர்நது அக்கட்சியினர் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல தேமுதிக தலைமையகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையை எட்டி விட்ட தகவலைப் பார்த்ததும் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்து விட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் குதூகலித்தனர்.

வழக்கம் போல அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு ஆட அந்த இடமே கோலாகலமாகி விட்டது.

கட்சித் தலைவர்கள் யாரும் இன்னும் அதிமுக தலைமையகத்திற்கு வரவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருப்பதால் அவ்வை சண்முகம் சாலையில் நிற்க இடமில்லாத நிலை.

இதேபோல கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திலும் விழாக் கோலமாக உள்ளது.

நூற்றுக்கணக்கில் குவி்ந்துள்ள தேமுதிகவினர் பட்டாசுகளை வெடித்து அந்த இடத்தையே பரபரப்பாக்கி விட்டனர். கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக டபுள் டிஜிட்டில் இந்தக் கட்சி சீட் வாங்குவதால் தேமுதிகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: