site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரி ஆட்சியை மம்தா அகற்றுவார் என கணிப்பு

Posted by sambala87(சூரியன்) on May 12, 2011

உலகிலேயே, ஜனநாயக முறையில், தேர்வு செய்யப்பட்டு, மேற்கு வங்க மாநில ஆட்சியில், 34 ஆண்டுகள் நீடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, இம்முறை தோல்வியை தழுவும் என, தேர்தலுக்கு பின் வெளியான அனைத்து கருத்து கணிப்புகளும் தெளிவாக்குகின்றன.

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான, ஆறு கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. மாநிலத்தில், கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் இடம் பெற்ற திரிணமுல் கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. தேர்தலுக்கு பின் வெளியான அனைத்து கருத்து கணிப்புகளிலும், ஆட்சியில் இருந்து, இடதுசாரி கூட்டணியை, மம்தாவின் திரிணமுல் கூட்டணி வெளியேற்றும் என்பது தெரிய வந்துள்ளது.

சி.என்.என்., – ஐ.பி.என்., “டிவி’ வெளியிட்ட கருத்து கணிப்பில், “திரிணமுல் கூட்டணி 222 முதல் 234 இடங்களில், இடதுசாரி கூட்டணி 60 முதல் 72 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தது. இடதுசாரி கூட்டணிக்கு, கடந்த 2006 தேர்தலில் பெற்ற 50 சதவீத ஓட்டுப்பதிவில், தற்போது 10 சதவீதத்தை இழந்து, 40 சதவீதமாக குறையும்’ என தெரிவித்துள்ளது. இடதுசாரி கூட்டணி நேர்மையானது என்ற கருத்து உள்ளது. ஆனால், இக்கூட்டணியில் லஞ்ச ஊழல் பெருகிவிட்டதாக, ஆய்வில், 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் ஆனந்தா, ஏ.சி.நீல்சன் இணைந்து எடுத்த ஆய்வில், “இடதுசாரி கூட்டணி 60, திரிணமுல் கூட்டணி 225, பா.ஜ., மற்றும் ஜி.ஜெ.எம்., 3, எஸ்.யு.சி.ஐ., ஒரு இடத்தில் வெற்றி பெறும். மா.கம்யூ., 47, பார்வர்டு பிளாக் 8, கம்யூனிஸ்ட் 2, ஆர்.எஸ்.பி., 3 இடங்களை பிடிக்கும்’ என கணித்துள்ளது.

நியூஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில், “ஆட்சியில் இருந்து இடதுசாரி கூட்டணியை திரிணமுல் கட்சி வெளியேற்றும். இடதுசாரி கூட்டணியின் வெற்றி 121 ஆக குறையும்’ என்று கணித்துள்ளது.

“இடதுசாரி கூட்டணி 50 முதல் 70 இடங்களில் வெற்றி பெறலாம்’ என ஹெட்லைன்ஸ் டுடே கணித்துள்ளது. இதற்கிடையே, “200 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்று இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடிக்கும்’ என, இடதுசாரி கூட்டணியின் தலைவர் பீமன் போஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரிணமுல் கட்சி தலைவி மம்தாவிடம் கேட்ட போது, “மாற்றத்திற்கு மக்கள் ஓட்டளித்து உள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகும் வரை நாங்கள் எதுவும் கூற மாட்டோம்’ என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: