site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பின்லேடனை கொல்ல 10 ஆண்டுக்கு முன்பே ஒப்பந்தம்! புதிய தகவலால் பரபரப்பு!

Posted by sambala87(சூரியன்) on May 12, 2011

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமாண்டோ படையினர் கடந்த வாரம் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்திடம் தெரிவிக்காமல் அந்த நாட்டுக்குள் அமெரிக்க படை அதிரடியாக புகுந்து பின்லேடனை கொன்றது. இதனால், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அதிபர் முஷரப்பும் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், அவர் பதவியில் இருந்த சமயத்தில் தான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா தன்னிச்சையாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை கொல்லலாம் அல்லது உயிருடன் பிடிக்கலாம்.

கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட உடனேயே, பின்லேடனை பிடிக்க அமெரிக்க ராணுவம் முழு முயற்சியில் இறங்கியது. ஆனால், பின்லேடனை பிடிக்க முடியவில்லை. எனவே, அருகில் உள்ள பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என அமெரிக்கா கருதியது. எனவே, 2001 ம் ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது.

அந்த ஒப்பந்தத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பாகிஸ்தானில் அப்போது சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் முஷ்ரப் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். அதன்படி, பாகிஸ்தானுக்குள் அல்கொய்தா தலைவர் பின்லேடன், துணைத் தலைவர் அல் ஜவாகிரி ஆகியோர் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பாகிஸ்தான் அரசின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாகவே தாக்குதல் நடத்த அமெரிக்காவிடம் பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தீவிரவாத ஒழிப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும்
பாகிஸ்தானில் உள்ள சில அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல் தெரிந்துள்ளது. தற்போது, அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி தான் இந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். பின்லேடன் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானியர்கள் எவ்வளவு தான் கண்டனம் தெரிவித்தாலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தம் 2008 ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அப்போதும், பாகிஸ்தான் தலைமை பதவியில் முஷரப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் மக்களால் ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட அதிபராக முஷரப் பதவி வகித்தார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

(nkn)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: